• Nov 07 2025

பாதீட்டை இலக்குவைத்தே அமைச்சரவையில் மாற்றம்! - நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

Chithra / Oct 15th 2025, 10:46 am
image


கொள்கலன் விடுவிப்பு சம்பவத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என  அமைச்சரவை பேச்சாளர் நளித்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பரந்துபட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்  தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொள்கலன் விடுவிப்பு சம்பவத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையானளவு கலந்துரையாடியுள்ளோம். 

அந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியும் குழுவொன்று நியமித்திருக்கிறார். இவ்வாறு பரிசோதனை செய்யும் கொள்கலன்கள் மற்றும் கொள்கலன் நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளினூடாக பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

அதற்காகவே குழு நியமிக்கப்பட்டு அதுதொடர்பான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையும் இடம்பெற்று வருகிறது.

மார்ச், ஏப்ரல், டிசம்பர் போன்ற காலப்பகுதிகளில் கொள்கலன் நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளினூடாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. 

இதற்கு முன்னரும் 14 சந்தர்ப்பங்களில் இவ்வாறு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் ஆட்சி செய்யவில்லை.  என்றார்.

பாதீட்டை இலக்குவைத்தே அமைச்சரவையில் மாற்றம் - நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் கொள்கலன் விடுவிப்பு சம்பவத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லை என  அமைச்சரவை பேச்சாளர் நளித்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பரந்துபட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்  தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கொள்கலன் விடுவிப்பு சம்பவத்துக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையானளவு கலந்துரையாடியுள்ளோம். அந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதியும் குழுவொன்று நியமித்திருக்கிறார். இவ்வாறு பரிசோதனை செய்யும் கொள்கலன்கள் மற்றும் கொள்கலன் நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளினூடாக பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளன என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதற்காகவே குழு நியமிக்கப்பட்டு அதுதொடர்பான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையும் இடம்பெற்று வருகிறது.மார்ச், ஏப்ரல், டிசம்பர் போன்ற காலப்பகுதிகளில் கொள்கலன் நெருக்கடியை தவிர்த்துக்கொள்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளினூடாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு முன்னரும் 14 சந்தர்ப்பங்களில் இவ்வாறு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.வரவு செலவுத் திட்டத்தில் நாங்கள் ஆட்சி செய்யவில்லை.  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement