நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகள் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது.
கொழும்பு நகர் முழுவதும் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுபோல தொடர்ந்தும் இந்த மழை பெய்யுமாக இருந்தால் கொழும்பின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே மக்கள் மழை நேரங்களில் அவதானமாக பயணங்களை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல் அடுத்து வரும் நாட்களில் வளிமண்டலத் தளம்பல் நிலைகள் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல பகுதிகள்; போக்குவரத்தும் பாதிப்பு நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகள் வெள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. கொழும்பு நகர் முழுவதும் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுபோல தொடர்ந்தும் இந்த மழை பெய்யுமாக இருந்தால் கொழும்பின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே மக்கள் மழை நேரங்களில் அவதானமாக பயணங்களை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல் அடுத்து வரும் நாட்களில் வளிமண்டலத் தளம்பல் நிலைகள் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.