• Apr 16 2025

பென்சில் கேட்ட மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் - தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி

Thansita / Apr 15th 2025, 10:41 pm
image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பாடசாலையில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

ஒரு மாணவன் பென்சில் கேட்டதாகவும் சகமாணவன் கொடுக்க மறுத்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே தகராறு இடம்பெற்றுள்ளது

அதனால் ஆத்திரமடைந்த மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலை  ஆசிரியர் தடுக்க முயன்ற வேளை அவரும் அரிவாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பென்சில் கேட்ட மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் - தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பாடசாலையில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்ஒரு மாணவன் பென்சில் கேட்டதாகவும் சகமாணவன் கொடுக்க மறுத்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே தகராறு இடம்பெற்றுள்ளதுஅதனால் ஆத்திரமடைந்த மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலை  ஆசிரியர் தடுக்க முயன்ற வேளை அவரும் அரிவாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement