• Apr 16 2025

மோடியை காணும்வரை 14 ஆண்டுகள் பாதணிகள் அணியாத விநோத நபர்! - மோடி செய்த செயல்!

Thansita / Apr 15th 2025, 10:21 pm
image

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வரை 14 ஆண்டுகளாக காலணி அணியாமல் இருந்த ராம்பால் காஷ்யப்புக்கு பிரதமர் காலணி அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான  ஹரியானா மாநிலம், கைத்தால் பகுதியைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் இருந்து வருகிறார்

இவர் மோடி பிரதமராக வர வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் சூளுரைத்தார். 

மேலும், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதுடன், தன்னை நேரில் சந்திக்கும் வரை காலணி அணியப் போவதில்லை என்று அறிவித்தார்.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி யமுனாநகர் பகுதியில் காலணி அணியாமல் வெறும் காலில் நடந்துவந்த அவரை, பொதுக் கூட்டத்தில் நேரில் அழைத்தார்.

மேலும் தான் வாங்கிவந்த காலணியை வழங்கி அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 

பிரதமர் முன்னிலையில் ராம்பால் காஷ்யப் காலணியை அணிந்து தனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டார்.

இதனை மோடி தனது அதிகாரப்பூர்வ 'X'  மற்றும் இன்ஸ்டாகிராமில்  இந்த சந்திப்பின் காணொளியை பதிவிட்டுள்ளார்.  தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

மேலும்'ராம்பால் ஜி போன்றவர்களால் தான்  நான் தாழ்மையுடன் இருக்கின்ற அதே நேரம் , அவர்களின் அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன்' என மோடி தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மோடியை காணும்வரை 14 ஆண்டுகள் பாதணிகள் அணியாத விநோத நபர் - மோடி செய்த செயல் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வரை 14 ஆண்டுகளாக காலணி அணியாமல் இருந்த ராம்பால் காஷ்யப்புக்கு பிரதமர் காலணி அணிவித்து மகிழ்ச்சி தெரிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளரான  ஹரியானா மாநிலம், கைத்தால் பகுதியைச் சேர்ந்த ராம்பால் காஷ்யப் இருந்து வருகிறார்இவர் மோடி பிரதமராக வர வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் சூளுரைத்தார். மேலும், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பதுடன், தன்னை நேரில் சந்திக்கும் வரை காலணி அணியப் போவதில்லை என்று அறிவித்தார்.இந்நிலையில், ஹரியானா மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி யமுனாநகர் பகுதியில் காலணி அணியாமல் வெறும் காலில் நடந்துவந்த அவரை, பொதுக் கூட்டத்தில் நேரில் அழைத்தார்.மேலும் தான் வாங்கிவந்த காலணியை வழங்கி அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பிரதமர் முன்னிலையில் ராம்பால் காஷ்யப் காலணியை அணிந்து தனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டார்.இதனை மோடி தனது அதிகாரப்பூர்வ 'X'  மற்றும் இன்ஸ்டாகிராமில்  இந்த சந்திப்பின் காணொளியை பதிவிட்டுள்ளார்.  தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.மேலும்'ராம்பால் ஜி போன்றவர்களால் தான்  நான் தாழ்மையுடன் இருக்கின்ற அதே நேரம் , அவர்களின் அன்பையும் ஏற்றுக்கொள்கிறேன்' என மோடி தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement