• Apr 03 2025

யாழில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர் கடற்படையினரால் கைது..!

Sharmi / Apr 2nd 2025, 1:46 pm
image

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று (2) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று(2) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடித்த படகுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்ட நபர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


யாழில் ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தவர் கடற்படையினரால் கைது. யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் இன்று (2) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று(2) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடித்த படகுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டார்கைது செய்யப்பட்ட நபர் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement