யாழ் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்புக்கான தீர்மானம் இன்று காலை சிறிய கலந்துரையாடலின் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலின் பின் வீதிப் புனரமைப்புக்கான அளவுத் திட்டங்களும் எடுக்கப்பட்டது.
பிரதானமாக கொடுக்குளாய் மல்வில் தீர்த்தக் கரையில் இருந்து ரீச்சா வரையுள்ள வீதிக்கான புனரமைப்புக்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும் என இக் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு குமாரசாமி பிரபாகரமூர்த்தி பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், கொடுக்குளாய் கிராம அபிவிருத்தி சங்கம், உடுத்துறை கிராம அபிவிருத்தி சங்கம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதையை புனரமைக்க தீர்மானம் யாழ் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்ற பாதை புனரமைமைப்புக்கான தீர்மானம் இன்று காலை சிறிய கலந்துரையாடலின் மத்தியில் எடுக்கப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலின் பின் வீதிப் புனரமைப்புக்கான அளவுத் திட்டங்களும் எடுக்கப்பட்டது.பிரதானமாக கொடுக்குளாய் மல்வில் தீர்த்தக் கரையில் இருந்து ரீச்சா வரையுள்ள வீதிக்கான புனரமைப்புக்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படும் என இக் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது.இக் கலந்துரையாடலில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு குமாரசாமி பிரபாகரமூர்த்தி பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், கொடுக்குளாய் கிராம அபிவிருத்தி சங்கம், உடுத்துறை கிராம அபிவிருத்தி சங்கம், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.