• Nov 01 2025

யாழ்.பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட மேலும் ஆயுதங்கள் மீட்பு! முழுமையாக சோதனையிட நடவடிக்கை!

Chithra / Oct 31st 2025, 3:52 pm
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரை பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரை பகுதியில் திருத்த வேலை நடைபெற்றபோதே நேற்று வியாழக்கிழமை இரண்டு மகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு குறித்த பொருட்கள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் இன்று காலை அகற்றப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் கூரை பகுதியில் திருத்த வேலை இடம்பெற்ற நிலையில் அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மகஸின், வயர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் சிலவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து மீண்டும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியை முழுமையாக சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



யாழ்.பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட மேலும் ஆயுதங்கள் மீட்பு முழுமையாக சோதனையிட நடவடிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரை பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயுதங்கள் இருக்கலாமென நம்பப்படும் நிலையில் முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரை பகுதியில் திருத்த வேலை நடைபெற்றபோதே நேற்று வியாழக்கிழமை இரண்டு மகசின்களும் வயர்களும் அடையாளம் காணப்பட்டன.இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு குறித்த பொருட்கள் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் இன்று காலை அகற்றப்பட்டது.இந்நிலையில் மீண்டும் கூரை பகுதியில் திருத்த வேலை இடம்பெற்ற நிலையில் அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மகஸின், வயர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் சிலவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதனையடுத்து மீண்டும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியை முழுமையாக சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement