அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பொன்றிலேயே நேற்று வியாழக்கிழமை (30) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞன் கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் 11 நாட்களாக வீடு திரும்பாமல் இருப்பதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னந்தோப்பு உரிமையாளர் சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் நாகுலுகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு அம்பாந்தோட்டையில் பெலியத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னந்தோப்பில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர். நாகுலுகமுவ, தெத்துவாவெல பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பொன்றிலேயே நேற்று வியாழக்கிழமை (30) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இளைஞன் கடந்த 19 ஆம் திகதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் 11 நாட்களாக வீடு திரும்பாமல் இருப்பதாக பெலியத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தென்னந்தோப்பு உரிமையாளர் சடலத்தை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மோட்டார் சைக்கிள் நாகுலுகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.