• Nov 01 2025

தாதியர்களைக் கண்டதும் வணக்கம் செலுத்திய நாய்; வைத்தியசாலையில் நெகிழ்ச்சி!

shanuja / Oct 31st 2025, 3:17 pm
image

தாதியர்களைக் கண்டதும் எழுந்து நின்று வணக்கம் செலுத்திய நாயின் நெகிழ்ச்சிச் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தென்னிலங்கையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது. 


வைத்தியசாலைக்கு வழமை போன்று தாதியர்கள் கடமைக்குச் சென்றுள்ளனர். அவ்வேளையில் தாதியர்களை வைத்தியசாலையில் வாசலில் நாயொன்று அவர்களை வரவேற்பது போன்று நின்றுள்ளது. 


அதிலும் தாதியர்கள் வருவதைக் கண்டதும் அந்த நாய் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளது. 


இவ்வாறு ஒரு குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் வைத்தியசாலைக்குக் கடமைக்குச் சென்ற தாதியர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளது. 


இதனைப் பார்த்த தாதியர்கள் பலரும் ஆச்சரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் நாயைப் பார்த்து இரசித்தனர். 


தாதியர்களுக்கு வணக்கம் செலுத்திய நாயின் செயல் காணொளியாக வெளிவந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாதியர்களைக் கண்டதும் வணக்கம் செலுத்திய நாய்; வைத்தியசாலையில் நெகிழ்ச்சி தாதியர்களைக் கண்டதும் எழுந்து நின்று வணக்கம் செலுத்திய நாயின் நெகிழ்ச்சிச் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் தென்னிலங்கையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் பதிவாகியுள்ளது. வைத்தியசாலைக்கு வழமை போன்று தாதியர்கள் கடமைக்குச் சென்றுள்ளனர். அவ்வேளையில் தாதியர்களை வைத்தியசாலையில் வாசலில் நாயொன்று அவர்களை வரவேற்பது போன்று நின்றுள்ளது. அதிலும் தாதியர்கள் வருவதைக் கண்டதும் அந்த நாய் எழுந்து நின்று அவர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளது. இவ்வாறு ஒரு குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் வைத்தியசாலைக்குக் கடமைக்குச் சென்ற தாதியர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளது. இதனைப் பார்த்த தாதியர்கள் பலரும் ஆச்சரியத்துடனும் நெகிழ்ச்சியுடனும் நாயைப் பார்த்து இரசித்தனர். தாதியர்களுக்கு வணக்கம் செலுத்திய நாயின் செயல் காணொளியாக வெளிவந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement