எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டிருந்தார்.
இக் கலந்துரையாடல் தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளிட்டுள்ளார். அப் பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்றைய தினம் பொலிஸ்மா அதிபர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்ற போது ஐரோப்பாவில் இருந்து Zoom மூலம் தொடர்பு கொண்டேன்.
இதன் போது தற்போதைய நிலையில் ஒரு வைத்தியராக எனக்கு போதைவஸ்து கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகம் குழுக்களில் இருந்து உயிராபத்து வராது என்பதை தெளிவாக தெரிவித்திருந்தேன்.
தற்போதைய நிலையில் எனது உயிருக்கு பங்கம் விளைவிக்க முனைவது அரசாங்கம் மற்றும் பொலிஸார் என்பதை சபாநாயகரிடம் தெரிவித்த போது பாராளுமன்ற சபாநாயகர் இது ஒரு நான்சென்ஸ் ஸ்டாக் (This is a nonsense talk") என்று நேரடியாக தெரிவித்திருந்தார்.
தமிழருக்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளாத அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் நான் கொண்டு வரவிருக்கும் இனப்படுகொலை தொடர்பான வழக்கினை பாரதூரமாக பார்க்கிறது.
தனி ஒருவனாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தது என்பதை இன்னும் ஒரிரு நாட்களில் பதிவு செய்யவுள்ளேன்.
இதனை பதிவு செய்த பின்னர், இலங்கைக்கு நான் வருகின்றபோது, உயிரச்சுறுத்தல் ஏற்பட்டால் அது தற்போதைய அரசாங்கம் மற்றும் சபாநாயகர், அது தவிர அரசாங்கத்தின் கைக்கூலியாக செயல்படுகின்ற பொலிசார் ஆகியோரால் மட்டுமே தவிர, எனக்கு எந்த பாதாள உலக குழுக்களுடனும் தொடர்பு என்று அல்லது போதை வஸ்து கடத்த காரர்களுடன் தொடர்பு என்றும் சித்தரிக்க முடியாது.
இந்த விடயத்தை கதைத்த போது சபாநாயகர் எனது Zoom மூலமாக இணைப்பை துண்டித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் பேச அனுமதிக்கவில்லை.
பொலிசார் பாதுகாப்பு தராத சந்தர்ப்பங்களில் என்னுடைய சுய பாதுகாப்பிற்காக ஆபத்து அற்ற பாதுகாப்பு கருவிகளை வைத்திருப்பதற்காக நான் கேட்ட கடிதத்திற்கு, சபாநாயகர் அது தொடர்பான அமைச்சரிடம் கேட்க சொல்லி கடிதம் அனுப்பியிருந்தார்.
அதனை பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் தொலைபேசியில் அழைப்பெடுத்து கேட்ட போது அந்த கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியதாக கூறிய போதும் இதுவரை கடிதத்துக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு 100 சதவீது பொறுப்பு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் என்பதை மிகத் தெளிவாக பொதுமக்களுக்காக இங்கே பதிவிடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
சபாநாயகரிடம் வாங்கி கட்டிய அர்ச்சுனா; உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பாம். எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபரே பொறுப்பு என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டிருந்தார். இக் கலந்துரையாடல் தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளிட்டுள்ளார். அப் பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய தினம் பொலிஸ்மா அதிபர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்ற போது ஐரோப்பாவில் இருந்து Zoom மூலம் தொடர்பு கொண்டேன். இதன் போது தற்போதைய நிலையில் ஒரு வைத்தியராக எனக்கு போதைவஸ்து கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகம் குழுக்களில் இருந்து உயிராபத்து வராது என்பதை தெளிவாக தெரிவித்திருந்தேன்.தற்போதைய நிலையில் எனது உயிருக்கு பங்கம் விளைவிக்க முனைவது அரசாங்கம் மற்றும் பொலிஸார் என்பதை சபாநாயகரிடம் தெரிவித்த போது பாராளுமன்ற சபாநாயகர் இது ஒரு நான்சென்ஸ் ஸ்டாக் (This is a nonsense talk") என்று நேரடியாக தெரிவித்திருந்தார். தமிழருக்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ளாத அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையில் நான் கொண்டு வரவிருக்கும் இனப்படுகொலை தொடர்பான வழக்கினை பாரதூரமாக பார்க்கிறது. தனி ஒருவனாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தது என்பதை இன்னும் ஒரிரு நாட்களில் பதிவு செய்யவுள்ளேன்.இதனை பதிவு செய்த பின்னர், இலங்கைக்கு நான் வருகின்றபோது, உயிரச்சுறுத்தல் ஏற்பட்டால் அது தற்போதைய அரசாங்கம் மற்றும் சபாநாயகர், அது தவிர அரசாங்கத்தின் கைக்கூலியாக செயல்படுகின்ற பொலிசார் ஆகியோரால் மட்டுமே தவிர, எனக்கு எந்த பாதாள உலக குழுக்களுடனும் தொடர்பு என்று அல்லது போதை வஸ்து கடத்த காரர்களுடன் தொடர்பு என்றும் சித்தரிக்க முடியாது. இந்த விடயத்தை கதைத்த போது சபாநாயகர் எனது Zoom மூலமாக இணைப்பை துண்டித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்தும் பேச அனுமதிக்கவில்லை. பொலிசார் பாதுகாப்பு தராத சந்தர்ப்பங்களில் என்னுடைய சுய பாதுகாப்பிற்காக ஆபத்து அற்ற பாதுகாப்பு கருவிகளை வைத்திருப்பதற்காக நான் கேட்ட கடிதத்திற்கு, சபாநாயகர் அது தொடர்பான அமைச்சரிடம் கேட்க சொல்லி கடிதம் அனுப்பியிருந்தார். அதனை பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் தொலைபேசியில் அழைப்பெடுத்து கேட்ட போது அந்த கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியதாக கூறிய போதும் இதுவரை கடிதத்துக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனது உயிருக்கு ஏதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு 100 சதவீது பொறுப்பு சபாநாயகர் மற்றும் பொலிஸ்மா அதிபர் என்பதை மிகத் தெளிவாக பொதுமக்களுக்காக இங்கே பதிவிடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.