“நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன்” என அடம்பிடித்த சிறுவனை கட்டிலோடு பள்ளிக்குத் தூக்கிச் சென்ற சம்பவம் பலரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாடசாலை என்றாலே சில சிறுவர்களுக்கு பயம் தான். அதிலும் வீட்டுப்பாடம் செய்யாததால் அல்லது ஆசிரியரின் திட்டிற்குப் பயப்படுவதால், சில குழந்தைகள் தினமும் புதிய காரணங்களைச் சொல்லி பள்ளியைத் தவிர்க்க முயல்வது வழக்கம். இதன் பின்னணியிலேயே குறித்த சிறுவனின் செயலும் பதிவாகியுள்ளது.
அதில் ‘நான் பள்ளிக்குப் போக மாட்டேன்’ என்று சொல்லி சிறுவன் தன் கட்டிலில் ஒட்டிக்கொண்டு அடம்பிடித்துள்ளார்.
குடும்பத்தினர் பலமுறை சமாதானப்படுத்த முயன்றும், அவன் அங்கிருந்து அசையவில்லை. ஒரு பாம்பு மரக்கிளையில் சுருண்டிருப்பது போல சிறுவன் கட்டிலின் காலை இறுகப் பிடித்துக் கொண்டிடுந்துள்ளான்.
கட்டிலை இறுகப்பற்றி அசைக்க முடியாமல் காணப்பட்ட சிறுவனை எவ்வாறேனும் பள்ளிக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்று உறவினர்கள் போராடினர்.
எனினும் எவருக்கும் சிறுவன் அசையாமல் அடம்பிடித்து இருந்துள்ளான். இதனால் சிறுவனின் உறவினர்களான இளைஞர்கள் இருவர், சிறுவனைக் கட்டிலோடு பள்ளிக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.
கட்டிலோடு சிறுவனைத் தூக்கிச் செல்லும் காணொளி சிரிப்பையும் சிந்தனையையும் வெளிப்படுத்தும் வகையில் அனைவரையும் ஈர்த்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலான சிறுவனின் காணொளி தற்போது இது 62,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
அந்த காணொளியைப் பார்த்த பலரும் சிறுவனது நடிப்பை ‘தேசிய விருது அளவிலானது’ எனப் பாராட்டியுள்ளனர். ஒருவர், “ஆசிரியர் குச்சியை உயர்த்தும்போது, இந்த பாம்பு ராஜ நாகமாக மாறும்!” என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
“பள்ளிக்குச் செல்ல மாட்டேன்” அடம்பிடித்த சிறுவன்; கட்டிலோடு தூக்கிச் சென்ற உறவினர்கள் “நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன்” என அடம்பிடித்த சிறுவனை கட்டிலோடு பள்ளிக்குத் தூக்கிச் சென்ற சம்பவம் பலரையும் கவர்ந்து இணையத்தில் வைரலாகியுள்ளது. பாடசாலை என்றாலே சில சிறுவர்களுக்கு பயம் தான். அதிலும் வீட்டுப்பாடம் செய்யாததால் அல்லது ஆசிரியரின் திட்டிற்குப் பயப்படுவதால், சில குழந்தைகள் தினமும் புதிய காரணங்களைச் சொல்லி பள்ளியைத் தவிர்க்க முயல்வது வழக்கம். இதன் பின்னணியிலேயே குறித்த சிறுவனின் செயலும் பதிவாகியுள்ளது. அதில் ‘நான் பள்ளிக்குப் போக மாட்டேன்’ என்று சொல்லி சிறுவன் தன் கட்டிலில் ஒட்டிக்கொண்டு அடம்பிடித்துள்ளார். குடும்பத்தினர் பலமுறை சமாதானப்படுத்த முயன்றும், அவன் அங்கிருந்து அசையவில்லை. ஒரு பாம்பு மரக்கிளையில் சுருண்டிருப்பது போல சிறுவன் கட்டிலின் காலை இறுகப் பிடித்துக் கொண்டிடுந்துள்ளான். கட்டிலை இறுகப்பற்றி அசைக்க முடியாமல் காணப்பட்ட சிறுவனை எவ்வாறேனும் பள்ளிக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் என்று உறவினர்கள் போராடினர். எனினும் எவருக்கும் சிறுவன் அசையாமல் அடம்பிடித்து இருந்துள்ளான். இதனால் சிறுவனின் உறவினர்களான இளைஞர்கள் இருவர், சிறுவனைக் கட்டிலோடு பள்ளிக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். கட்டிலோடு சிறுவனைத் தூக்கிச் செல்லும் காணொளி சிரிப்பையும் சிந்தனையையும் வெளிப்படுத்தும் வகையில் அனைவரையும் ஈர்த்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலான சிறுவனின் காணொளி தற்போது இது 62,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த காணொளியைப் பார்த்த பலரும் சிறுவனது நடிப்பை ‘தேசிய விருது அளவிலானது’ எனப் பாராட்டியுள்ளனர். ஒருவர், “ஆசிரியர் குச்சியை உயர்த்தும்போது, இந்த பாம்பு ராஜ நாகமாக மாறும்” என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.