விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள இந்தோனேஷியா தனது அனுபவங்களை வடக்கு மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்தோனேஷpயத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர், பிரதித்தூதுவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (31.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர்.
வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்த ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் விவரித்தார்.
வடக்கு மாகாணத்தின் பல்வேறு தேவைகளையும் தற்போதை அரசாங்கம் கண்டறிந்து நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய ஆளுநர், இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கு மாகாணம் மிகப்பெரிய அபிவிருத்திக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் வளமுள்ள மாகாணம் வடக்கு மாகாணம் எனத் தெரிவித்த ஆளுநர், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றமை வேதனையானது எனக் குறிப்பிட்டார். விவசாயம், மீன்பிடி இரண்டுக்கும் மிகப்பெரிய வாய்ப்புக்கள் உள்ளபோதும் பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக அவற்றை மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் இல்லாமை பெரும் பின்னடைவாக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
விவசாயத்தில் குறிப்பாக நெற்பயிர்ச் செய்கையில் இந்தோனேஷpயா முன்னணியில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்களுடைய அனுபவங்கள் எங்கள் விவசாயிகளுடன் பகிரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறுகிய காலத்தில் நெல் உற்பத்தி, நவீன முறைமை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பகிரப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தோனேஷpயாவின் விவசாய முறைமை உள்ளிட்ட விடயங்களைப் பகிர்ந்து கொண்ட தூதுவர் குறிப்பாக கலப்பு உரப்பாவனையையும் அதன் வெற்றியையும் சுட்டிக்காட்டினார். விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல, காலநிலை மாற்றத்தால் அடிக்கடி பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நாடு என்ற அடிப்படையில் அவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுக்கின்றீர்கள் என்பது தொடர்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது எமது மாகாணத்துக்கு தற்போதைய சூழலில் பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இந்தோனேஷpயாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் ஏற்பட்டது என்றும் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை எனவும் குறிப்பிட்ட தூதுவர் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக பகிர்ந்து கொள்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் சி.சத்தியசீலன், ஆளுநரின் உதவிச் செயலர் க.ஏகாந்தன், ஆளுநரின் இணைப்புச் செயலர் இ.சர்வானந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.
விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இந்தோனேஷியா தனது அனுபவங்களை வட மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள இந்தோனேஷியா தனது அனுபவங்களை வடக்கு மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான இந்தோனேஷpயத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர், பிரதித்தூதுவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் (31.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர்.வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்த ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் விவரித்தார். வடக்கு மாகாணத்தின் பல்வேறு தேவைகளையும் தற்போதை அரசாங்கம் கண்டறிந்து நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய ஆளுநர், இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் வடக்கு மாகாணம் மிகப்பெரிய அபிவிருத்திக்கான வாய்ப்பை இழந்துவிடும் என்றும் குறிப்பிட்டார். இலங்கையில் வளமுள்ள மாகாணம் வடக்கு மாகாணம் எனத் தெரிவித்த ஆளுநர், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றமை வேதனையானது எனக் குறிப்பிட்டார். விவசாயம், மீன்பிடி இரண்டுக்கும் மிகப்பெரிய வாய்ப்புக்கள் உள்ளபோதும் பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக அவற்றை மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் இல்லாமை பெரும் பின்னடைவாக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். விவசாயத்தில் குறிப்பாக நெற்பயிர்ச் செய்கையில் இந்தோனேஷpயா முன்னணியில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் அவர்களுடைய அனுபவங்கள் எங்கள் விவசாயிகளுடன் பகிரப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். குறுகிய காலத்தில் நெல் உற்பத்தி, நவீன முறைமை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பகிரப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்தோனேஷpயாவின் விவசாய முறைமை உள்ளிட்ட விடயங்களைப் பகிர்ந்து கொண்ட தூதுவர் குறிப்பாக கலப்பு உரப்பாவனையையும் அதன் வெற்றியையும் சுட்டிக்காட்டினார். விவசாய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.அதேபோல, காலநிலை மாற்றத்தால் அடிக்கடி பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நாடு என்ற அடிப்படையில் அவற்றுக்கு எவ்வாறு முகம் கொடுக்கின்றீர்கள் என்பது தொடர்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வது எமது மாகாணத்துக்கு தற்போதைய சூழலில் பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார். இந்தோனேஷpயாவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கம் ஏற்பட்டது என்றும் தற்போது அவ்வாறான நிலைமை இல்லை எனவும் குறிப்பிட்ட தூதுவர் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆளுநர் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக பகிர்ந்து கொள்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் சி.சத்தியசீலன், ஆளுநரின் உதவிச் செயலர் க.ஏகாந்தன், ஆளுநரின் இணைப்புச் செயலர் இ.சர்வானந்தா ஆகியோரும் பங்கேற்றனர்.