• Apr 03 2025

இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வந்துள்ள விசேட பாதுகாப்பு குழு

Chithra / Apr 2nd 2025, 1:45 pm
image

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க இந்தியாவில் இருந்து ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு கொழும்புக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி எதிர்வரும்  4 முதல் 6 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தநிலையில், இந்தியப் பிரதமரின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்ய பொலிஸாருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், வருகைக்கான ஆயத்தமாக இன்று (2) பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்தியாவில் இருந்து கொழும்பிற்கு வந்துள்ள விசேட பாதுகாப்பு குழு  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னதாக, இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க இந்தியாவில் இருந்து ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு கொழும்புக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நரேந்திர மோடி எதிர்வரும்  4 முதல் 6 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.இந்தநிலையில், இந்தியப் பிரதமரின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்ய பொலிஸாருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், வருகைக்கான ஆயத்தமாக இன்று (2) பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Advertisement

Advertisement

Advertisement