• Mar 17 2026

எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பெண்; முச்சக்கரவண்டி சாரதியின் செயலால் அதிர்ச்சி

Chithra / Feb 6th 2026, 8:11 am
image


பதுளை- எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜெர்மனியிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா வந்த 26 வயதுடைய இளம் பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.


குறித்த வெளிநாட்டு பெண் எல்ல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக சந்தேக நபரின் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.


இதன்போது சாரதி தமக்கு பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாக அந்த யுவதி சுற்றுலாப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


பெண்ணின் முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான சாரதி கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.


நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேக நபர், வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பெண்; முச்சக்கரவண்டி சாரதியின் செயலால் அதிர்ச்சி பதுளை- எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.ஜெர்மனியிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா வந்த 26 வயதுடைய இளம் பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.குறித்த வெளிநாட்டு பெண் எல்ல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக சந்தேக நபரின் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.இதன்போது சாரதி தமக்கு பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாக அந்த யுவதி சுற்றுலாப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.பெண்ணின் முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான சாரதி கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர், வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement