• Nov 24 2024

2025 இல் பொது தேர்தல் என்றால் 2026 இல் தான் இனப்பிரச்சினைக்கு தீர்வா? - சுரேஷ் பிரமச்சந்திரன் கேள்வி...!samugammedia

Anaath / Dec 26th 2023, 6:56 pm
image

நாட்டில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்றுள்ள ஊடக வியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பொழுது தமிழர் தரப்பிலிருந்து குறைத்த பட்சம் முதல் கட்டமாக ஏற்கனவே அரசியல் சாசனத்தில் இருக்க கூடிய 13 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றும்படி கேட்டும் கூட இப்பொழுது அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு அடுத்த நாடாளுமன்ற தேர்தல் என்பது 2025 ஆம் ஆண்டு தான் நடக்கும் என ஜனாதிபதி கூறுகின்றார்.

அதற்கு பிற்பாடு இந்த ஒரு வருடத்துக்குள் நாங்கள் இந்த இனப்பிரச்சினையை தீர்ப்பது பற்றி ஆராயலாம் என்று சொன்னால் 2026 ஆம் ஆண்டுதான் இனப்பிரச்சினை தீர்வும் பற்றி பேசுவோம். குறைந்த பட்சம் 13 ஆவது திருத்தத்தை கூட அவர் இப்பொழுது நடைமுறைப்படுத்த தயாராக இல்லாமல் எல்லாவற்றையும் 2026 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைத்திருக்க கூடிய சூழ்நிலையைத்தான் பார்க்க கூடியதாக இருதிருக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு நாங்கள் வாக்களித்து என்ன சாதிக்கப்போகின்றோம் என்றொரு கேள்வி இருக்கின்றது. 

நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படவிருக்கிற ஒரு சமுதாயமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றோம் ஒட்டு மொத்தமாக தமிழர் தரப்புக்கள் சேர்ந்து ஒரு பொது வேட்ப்பாளரை நிறுத்தவேண்டும். 

நிச்சயமாக சிங்கள தரப்பிலிருந்து வரக்கூடிய தரப்பாக இருந்தாலும் ஏறத்தாழ ஐந்து ஆறு இலட்சம் தமிழ் வாக்குகள் அவர்களுக்கு தேவைப்படுமிடத்து எங்களுடன் ஆக்கபூர்வமான  பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய காலம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. என்று நாங்கள் நம்புகின்றோம்.

அந்தவகையில் வகையில் நாங்கள் ஏற்கனவே இது தொடர்பாக EPRLF , TELO , PLOT , தமிழ் தேசிய கட்சி,  ஜனநாயகப்போராளிகள் உட்பட விக்கினேஸ்வரன் அவர்களும் கூட இதில் இணைந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கு தங்களது சம்மதத்தை தெரிவைத்திருக்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில்  தமிழரசுக்கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் இதற்கு சம்மதித்து வருவார்களாக இருந்தால் நிச்சயமாக யார் ஒரு பொது வேட்ப்பாளர் என்ற விடயத்தை நாங்கள் ஆராய்ந்து சரியான ஒரு வேட்பாளரை தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.

2025 இல் பொது தேர்தல் என்றால் 2026 இல் தான் இனப்பிரச்சினைக்கு தீர்வா - சுரேஷ் பிரமச்சந்திரன் கேள்வி.samugammedia நாட்டில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்றுள்ள ஊடக வியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பொழுது தமிழர் தரப்பிலிருந்து குறைத்த பட்சம் முதல் கட்டமாக ஏற்கனவே அரசியல் சாசனத்தில் இருக்க கூடிய 13 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றும்படி கேட்டும் கூட இப்பொழுது அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு அடுத்த நாடாளுமன்ற தேர்தல் என்பது 2025 ஆம் ஆண்டு தான் நடக்கும் என ஜனாதிபதி கூறுகின்றார்.அதற்கு பிற்பாடு இந்த ஒரு வருடத்துக்குள் நாங்கள் இந்த இனப்பிரச்சினையை தீர்ப்பது பற்றி ஆராயலாம் என்று சொன்னால் 2026 ஆம் ஆண்டுதான் இனப்பிரச்சினை தீர்வும் பற்றி பேசுவோம். குறைந்த பட்சம் 13 ஆவது திருத்தத்தை கூட அவர் இப்பொழுது நடைமுறைப்படுத்த தயாராக இல்லாமல் எல்லாவற்றையும் 2026 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைத்திருக்க கூடிய சூழ்நிலையைத்தான் பார்க்க கூடியதாக இருதிருக்கிறது. இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு நாங்கள் வாக்களித்து என்ன சாதிக்கப்போகின்றோம் என்றொரு கேள்வி இருக்கின்றது. நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படவிருக்கிற ஒரு சமுதாயமாக இருக்க விரும்பவில்லை. ஆகவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றோம் ஒட்டு மொத்தமாக தமிழர் தரப்புக்கள் சேர்ந்து ஒரு பொது வேட்ப்பாளரை நிறுத்தவேண்டும். நிச்சயமாக சிங்கள தரப்பிலிருந்து வரக்கூடிய தரப்பாக இருந்தாலும் ஏறத்தாழ ஐந்து ஆறு இலட்சம் தமிழ் வாக்குகள் அவர்களுக்கு தேவைப்படுமிடத்து எங்களுடன் ஆக்கபூர்வமான  பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய காலம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. என்று நாங்கள் நம்புகின்றோம்.அந்தவகையில் வகையில் நாங்கள் ஏற்கனவே இது தொடர்பாக EPRLF , TELO , PLOT , தமிழ் தேசிய கட்சி,  ஜனநாயகப்போராளிகள் உட்பட விக்கினேஸ்வரன் அவர்களும் கூட இதில் இணைந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கு தங்களது சம்மதத்தை தெரிவைத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்  தமிழரசுக்கட்சியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் இதற்கு சம்மதித்து வருவார்களாக இருந்தால் நிச்சயமாக யார் ஒரு பொது வேட்ப்பாளர் என்ற விடயத்தை நாங்கள் ஆராய்ந்து சரியான ஒரு வேட்பாளரை தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement