தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ள சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், த.வெ.க தலைவர் விஜய் கடும் பாதுகாப்பு மத்தியிலேயே பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
முதல் முறையாக தனித்து போட்டியிட்டு முக்கிய வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
பனையூரில் உள்ள த.வெ.க தலைமையகத்திற்கு விஜய் வந்ததும், கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மை ஆதரவைப் பெறுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
வெற்றி சான்றிதழ்களுடன் அலுவலகம் வந்த எம்.எல்.ஏ-களை ஆட்சி பொறுப்பேற்கும் வரை சென்னை நகரிலுள்ள ரிசார்ட்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், த.வெ.க அலுவலகம் மற்றும் விஜய்யின் இல்லம் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலுவலகத்திற்குள் நுழையும் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணிக்காக ஏராளமான பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்தத் தேர்தலில் த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.
பனையூரில் விஜய்க்கு பலத்த வரவேற்பு - கொள்கை தலைவர்களுக்கு மரியாதை தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ள சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், த.வெ.க தலைவர் விஜய் கடும் பாதுகாப்பு மத்தியிலேயே பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். முதல் முறையாக தனித்து போட்டியிட்டு முக்கிய வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.பனையூரில் உள்ள த.வெ.க தலைமையகத்திற்கு விஜய் வந்ததும், கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, பெரும்பான்மை ஆதரவைப் பெறுவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.வெற்றி சான்றிதழ்களுடன் அலுவலகம் வந்த எம்.எல்.ஏ-களை ஆட்சி பொறுப்பேற்கும் வரை சென்னை நகரிலுள்ள ரிசார்ட்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், த.வெ.க அலுவலகம் மற்றும் விஜய்யின் இல்லம் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலுவலகத்திற்குள் நுழையும் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பணிக்காக ஏராளமான பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, இந்தத் தேர்தலில் த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாததால், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்துள்ளன.