• Apr 14 2026

திரை மறைவில் ஒரு கரம்" நூல் வெளியீட்டு விழா!

shanu / Feb 8th 2026, 6:10 pm
image

எழுத்தாளர் சப்னி தாஜுதீன் எழுதிய கொடை வள்ளல் அப்துல் ஹமீது முஹம்மத் ஆரிப் ஹாஜியார் பற்றிய "திரை மறைவில் ஒரு கரம்" எனும் நூல் வெளியீட்டு விழா கண்டி கெங்கல்ல ரீகல் கிரேடன்ஸ் ஹோட்டல் மண்டபத்தில் நேற்று(07)சனிக்கிழமை காலை இடம் பெற்றது.


அஸ்ஹர் ஆரிப் தலைமையின் கீழ் இடம்பெற்ற  நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு ஷாஹிரா கல்லூரியின் அதிபர் முஹம்மத் மன்ஷில் கலந்து கொண்டார்.


நூல் பற்றிய விசேட உரையினை அகில இலங்கை சமாதான நீதிவான் எம்.ஏ.ஷஹாப்தீன் வழங்கினார்.


இந்நிகழ்வில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டதோடு, நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வின் போது நூலாசிரியரினால் எழுதப்பட்ட நூல்கள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

திரை மறைவில் ஒரு கரம்" நூல் வெளியீட்டு விழா எழுத்தாளர் சப்னி தாஜுதீன் எழுதிய கொடை வள்ளல் அப்துல் ஹமீது முஹம்மத் ஆரிப் ஹாஜியார் பற்றிய "திரை மறைவில் ஒரு கரம்" எனும் நூல் வெளியீட்டு விழா கண்டி கெங்கல்ல ரீகல் கிரேடன்ஸ் ஹோட்டல் மண்டபத்தில் நேற்று(07)சனிக்கிழமை காலை இடம் பெற்றது.அஸ்ஹர் ஆரிப் தலைமையின் கீழ் இடம்பெற்ற  நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு ஷாஹிரா கல்லூரியின் அதிபர் முஹம்மத் மன்ஷில் கலந்து கொண்டார்.நூல் பற்றிய விசேட உரையினை அகில இலங்கை சமாதான நீதிவான் எம்.ஏ.ஷஹாப்தீன் வழங்கினார்.இந்நிகழ்வில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டதோடு, நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வின் போது நூலாசிரியரினால் எழுதப்பட்ட நூல்கள் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement