• Apr 22 2025

மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் உணர்வுபூர்வ அஞ்சலி..!

Sharmi / Apr 22nd 2025, 8:37 pm
image

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்சிஸ் வத்திகானில் நேற்றையதினம் காலமானார்.

அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், வவுனியா தமிழர் தாயகம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவர்கள் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பரிசுத்த பாப்பரசரின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

 காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் உணர்வுபூர்வ அஞ்சலி. மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்சிஸ் வத்திகானில் நேற்றையதினம் காலமானார்.அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.அந்தவகையில், வவுனியா தமிழர் தாயகம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.அவர்கள் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது பரிசுத்த பாப்பரசரின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement