• Feb 05 2025

தீவிரமாகப் பரவும் ஒருவகை நோய் - அழிவடைந்த 5,000 ஏக்கர் தெங்கு செய்கை

Chithra / Dec 9th 2024, 9:47 am
image

 

புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவும் ஒரு வகையான நோய் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  

இதன்காரணமாக தெங்கு செய்கையாளர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்னனர். 

வெள்ளை ஈ, சிவப்பு மற்றும் கருப்பு வண்டுகள் காரணமாக தமது செய்கை பாதித்துள்ளதாகத் தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சந்தையில் தேங்காய் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதன்படி, புத்தளம் மாவட்டத்தில் 5,000 ஏக்கர் தெங்கு செய்கை அழிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரியுள்ளனர்.


தீவிரமாகப் பரவும் ஒருவகை நோய் - அழிவடைந்த 5,000 ஏக்கர் தெங்கு செய்கை  புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவும் ஒரு வகையான நோய் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  இதன்காரணமாக தெங்கு செய்கையாளர்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்னனர். வெள்ளை ஈ, சிவப்பு மற்றும் கருப்பு வண்டுகள் காரணமாக தமது செய்கை பாதித்துள்ளதாகத் தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் தேங்காய் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, புத்தளம் மாவட்டத்தில் 5,000 ஏக்கர் தெங்கு செய்கை அழிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெங்கு செய்கையாளர்கள் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement