திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடித் தீவு சந்தியில் இருந்து மகமாரு வரையான வீதி சுமார் 25 வருடகாலமாக குன்றும் குழியுமாக போக்குவரத்து செய்யப்படாத நிலை காணப்பட்டது.
இதனை கருத்திற் கொண்டு மகமாரு பகுதியில் வசிக்கும் மாணவனான ஏ.எச்.நவீத் எனும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவனால் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை கருத்திற் கொண்ட ஜனாதிபதி செயலகம் ஊடாக குறித்த மாணவனுக்கு பதில் கிடைக்கப் பெற்று காபட் வீதியாக செப்பணிடப்பட்டது.
குறித்த வீதியானது சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் கொண்டதுடன் இதன் ஊடாக பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலர் நாளாந்தம் பயணம் செய்யும் வீதியாகும் .
இவ் வீதியூடாக கல்லடிவெட்டுவான்,குரங்குபாஞ்சான்,சுண்டியாறு என பல கிராமங்களுக்கு சென்று விவசாய நடவடிக்கைக்காக பயன்படுத்தும் நிலை இங்கு காணப்படுகிறது .
இதனால் குறித்த பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
நாட்டின் பொருளாதார கஷ்டங்களை நீக்கி தற்போது எம் பகுதிக்கு நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத வீதியை காபட் வீதியாக மாற்றி தந்தமைக்கு மேலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
ஜனாதிபதியிடம் கிண்ணியா மாணவன் விடுத்த கோரிக்கை. அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை. திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடித் தீவு சந்தியில் இருந்து மகமாரு வரையான வீதி சுமார் 25 வருடகாலமாக குன்றும் குழியுமாக போக்குவரத்து செய்யப்படாத நிலை காணப்பட்டது.இதனை கருத்திற் கொண்டு மகமாரு பகுதியில் வசிக்கும் மாணவனான ஏ.எச்.நவீத் எனும் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவனால் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை கருத்திற் கொண்ட ஜனாதிபதி செயலகம் ஊடாக குறித்த மாணவனுக்கு பதில் கிடைக்கப் பெற்று காபட் வீதியாக செப்பணிடப்பட்டது. குறித்த வீதியானது சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் கொண்டதுடன் இதன் ஊடாக பாடசாலை மாணவர்கள் பொது மக்கள் என பலர் நாளாந்தம் பயணம் செய்யும் வீதியாகும் .இவ் வீதியூடாக கல்லடிவெட்டுவான்,குரங்குபாஞ்சான்,சுண்டியாறு என பல கிராமங்களுக்கு சென்று விவசாய நடவடிக்கைக்காக பயன்படுத்தும் நிலை இங்கு காணப்படுகிறது .இதனால் குறித்த பகுதி மக்கள் ஜனாதிபதிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர். நாட்டின் பொருளாதார கஷ்டங்களை நீக்கி தற்போது எம் பகுதிக்கு நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத வீதியை காபட் வீதியாக மாற்றி தந்தமைக்கு மேலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.