• Sep 21 2026

புயலில் சிக்கி கவிழ்ந்த கேரள படகு சிலாபத்தில் கரை ஒதுங்கியது - மூன்று மீனவர்கள் மீட்பு

Chithra / Aug 15th 2026, 11:42 am
image


இந்தியாவின் கேரளாவில் இருந்து மூவருடன் புறப்பட்ட படகு புயலில் சிக்கி கவிழ்ந்த நிலையில், அதிலிருந்த மூன்று மீனவர்களும் சக இந்திய மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.


எனினும், கடும் அலைகளில் சிக்கிய படகின் இயந்திரம் கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், குறித்த படகு இன்று (15) அதிகாலை சிலாபம், இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.


கரை ஒதுங்கியுள்ள படகில் பாறைகளில் மோதியதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த படகில் நபர்கள் பயணித்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


கரை ஒதுங்கியுள்ள படகு தொடர்பில் இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


மேலும், குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புயலில் சிக்கி கவிழ்ந்த கேரள படகு சிலாபத்தில் கரை ஒதுங்கியது - மூன்று மீனவர்கள் மீட்பு இந்தியாவின் கேரளாவில் இருந்து மூவருடன் புறப்பட்ட படகு புயலில் சிக்கி கவிழ்ந்த நிலையில், அதிலிருந்த மூன்று மீனவர்களும் சக இந்திய மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.எனினும், கடும் அலைகளில் சிக்கிய படகின் இயந்திரம் கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், குறித்த படகு இன்று (15) அதிகாலை சிலாபம், இரணாவில பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.கரை ஒதுங்கியுள்ள படகில் பாறைகளில் மோதியதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த படகில் நபர்கள் பயணித்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.கரை ஒதுங்கியுள்ள படகு தொடர்பில் இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மேலும், குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement