நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக நேற்று (13) ஒரு கிலோகிராம் கரட் 1000 முதல் 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நுவரெலியா பிரதேச விவசாயிகளிடம் இருந்து நேற்று (13) ஒரு கிலோகிராம் கரட் 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும்,
அவ்வாறு பெறப்பட்ட கரட் சரியான தரம் வாய்ந்ததாக இல்லை எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
லீக்ஸ் மற்றும் பீட்ரூட் 500 ரூபாய்க்கும், போஞ்சி 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கெரட் 350 முதல் 400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு கிலோ கரட் 1,000 ரூபா. - உச்சம் தொடும் மரக்கறிகளின் விலை நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக நேற்று (13) ஒரு கிலோகிராம் கரட் 1000 முதல் 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், நுவரெலியா பிரதேச விவசாயிகளிடம் இருந்து நேற்று (13) ஒரு கிலோகிராம் கரட் 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும்,அவ்வாறு பெறப்பட்ட கரட் சரியான தரம் வாய்ந்ததாக இல்லை எனவும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.லீக்ஸ் மற்றும் பீட்ரூட் 500 ரூபாய்க்கும், போஞ்சி 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கெரட் 350 முதல் 400 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.