• Feb 23 2025

சிவனடிபாதமலைக்கு அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை.

Thansita / Feb 23rd 2025, 9:41 am
image

மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக சிவனடிபாதமலைக்கு நேற்று மாலை முதல் அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இன்று காலை முதல் சுமார் இரண்டு லட்சம் யாத்திரிகர்கள் வருகை தந்து உள்ளனர் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக வாகனங்களில் வருகை தந்து உள்ளனர்.

மேலும் அவர் கூறுகையில்

அரச பேருந்து மற்றும் ரயிலில் வந்து  நல்லதண்ணி வரும் யாத்திரிகர்கள் மற்றும் தனியார் பேருந்து ஏனைய வாகனங்கள் மூலம் வருகை தந்த யாத்திரிகர்கள் நல்லதண்ணி நகரில் உள்ள வாகன தயாரிப்பு இடங்கள் நிரம்பி மறே நெடுஞ்சாலையிலும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிறுத்தி வைக்க பட்டுள்ளது.

 இன்னும் இரவு வேளையில் அதிகரிக்க கூடும் எனவும் நோட்டன் பிரிட்ஜ் நல்லதண்ணி வீதி தற்போது வாகனங்கள் நிரம்பிய நிலையில் உள்ளது என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது வரை எவ்விதமான அசம்பாவிதம் இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர். 

பெரும் பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.

நேற்று இரவு 9 மணிக்கு ஊசி மலை பகுதியில் நிறுத்தப்பட்ட மலை ஏறல் சுமார் பாதினொரு மணித்தியாலம் தடைப்பட்டு இருந்த மலை உச்சிக்கு செல்லும் பயணம் மீண்டும் ஆரம்பமாகி யாத்திரிகர்கள் தரிசனம் செய்து விட்டு இரு வழிகளில் திரும்புகின்றனர்.

இரத்தினபுரி மற்றும் நல்லதண்ணி வழிகளில் அதிக அளவில் யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளனர்.

சிவனடிபாதமலைக்கு அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை. மூன்று நாட்கள் விடுமுறை காரணமாக சிவனடிபாதமலைக்கு நேற்று மாலை முதல் அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.இன்று காலை முதல் சுமார் இரண்டு லட்சம் யாத்திரிகர்கள் வருகை தந்து உள்ளனர் என்று நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.என்றும் இல்லாத அளவுக்கு அதிகமாக வாகனங்களில் வருகை தந்து உள்ளனர்.மேலும் அவர் கூறுகையில்அரச பேருந்து மற்றும் ரயிலில் வந்து  நல்லதண்ணி வரும் யாத்திரிகர்கள் மற்றும் தனியார் பேருந்து ஏனைய வாகனங்கள் மூலம் வருகை தந்த யாத்திரிகர்கள் நல்லதண்ணி நகரில் உள்ள வாகன தயாரிப்பு இடங்கள் நிரம்பி மறே நெடுஞ்சாலையிலும் நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. இன்னும் இரவு வேளையில் அதிகரிக்க கூடும் எனவும் நோட்டன் பிரிட்ஜ் நல்லதண்ணி வீதி தற்போது வாகனங்கள் நிரம்பிய நிலையில் உள்ளது என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.தற்போது வரை எவ்விதமான அசம்பாவிதம் இல்லை என்று பொலிசார் தெரிவித்தனர். பெரும் பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.நேற்று இரவு 9 மணிக்கு ஊசி மலை பகுதியில் நிறுத்தப்பட்ட மலை ஏறல் சுமார் பாதினொரு மணித்தியாலம் தடைப்பட்டு இருந்த மலை உச்சிக்கு செல்லும் பயணம் மீண்டும் ஆரம்பமாகி யாத்திரிகர்கள் தரிசனம் செய்து விட்டு இரு வழிகளில் திரும்புகின்றனர்.இரத்தினபுரி மற்றும் நல்லதண்ணி வழிகளில் அதிக அளவில் யாத்திரிகர்கள் வருகை தந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement