• Apr 22 2026

திருகோணமலையில் அகற்றப்பட்ட திலீபனின் நினைவுப் படம்; பொலிசார் அடாவடி

Chithra / Sep 19th 2025, 1:17 pm
image


தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று  காலை பொலிசாரால் நினைவுபடம் அகற்றப்பட்டுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால், திலீபனின் நினைவு உருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்றைய தினம் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நினைவுபடம் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் அகற்றப்பட்ட திலீபனின் நினைவுப் படம்; பொலிசார் அடாவடி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று  காலை பொலிசாரால் நினைவுபடம் அகற்றப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால், திலீபனின் நினைவு உருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்றைய தினம் திருகோணமலை பிரதான பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நினைவுபடம் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement