• Apr 23 2026

ரயிலுக்குள் குழந்தையை தவற விட்டு தன்னுயிரைப் பணயம் வைத்த தாய்; இறுதியில் வென்ற அன்பு!

shanu / Apr 22nd 2026, 4:25 pm
image

ரயிலுக்குள் சிக்கியிருந்த தன் குழந்தையை அடைய,  உயிரையே பணயம் வைத்த தாயின் காணொளி தற்போது வைரலாகி பதறவைத்துள்ளது. 


இந்தச் சம்பவம் இந்தியாவில் ஓர் ரயில் நிலையத்தில் பதிவாகியுள்ளது. 


ரயில் நிலையத்திலிருந்து புறப்படத் தயாரான ரயிலில் தாயொருவர் தனது குழந்தையை ஏற்றியுள்ளார். பின்னர் பொருள்களை எடுத்துக்கொண்டு ரயிலில் ஏற முற்பட்டுள்ளார். 


எனினும் ரயில் புறப்பட ஆரம்பித்து விட்டது. உடனே ரயிலுக்குள் இருந்த தன் குழந்தையை மீட்க  அந்தத் தாய் முயன்றுள்ளார். 


ஓடும் ரயிலில் தன் உயிரைப் பணயம் வைத்து ரயிலில் ஏற மூன்று முறை முயற்சித்து கீழே விழுந்தார்.


முதல் தடவை விழுந்து மீண்டும் மீண்டும் முயற்சியைக் கைவிடாது திணறினார். இறுதியாக மூன்றாவது தடவை அவர் ரயிலில் ஏறியுள்ளார். 


இதில் அதிர்ச்சியூட்டும் விடயம் என்னவென்றால், ரயிலை நிறுத்த அவசரகால சங்கிலியை யாரும் இழுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 


வெளியாகிய காணொளியில் அந்தத் தாய் தனது குழந்தை மீட்க ஏங்கிக்கொண்டு கீழே விழுந்து விழுந்து எழுவதை அனைவரும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


இருப்பினும் காணொளி வெளியாகி தாயின் அன்புக்கு ஈடாகுமா என்றவாறு அனைவரின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது. 

ரயிலுக்குள் குழந்தையை தவற விட்டு தன்னுயிரைப் பணயம் வைத்த தாய்; இறுதியில் வென்ற அன்பு ரயிலுக்குள் சிக்கியிருந்த தன் குழந்தையை அடைய,  உயிரையே பணயம் வைத்த தாயின் காணொளி தற்போது வைரலாகி பதறவைத்துள்ளது. இந்தச் சம்பவம் இந்தியாவில் ஓர் ரயில் நிலையத்தில் பதிவாகியுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து புறப்படத் தயாரான ரயிலில் தாயொருவர் தனது குழந்தையை ஏற்றியுள்ளார். பின்னர் பொருள்களை எடுத்துக்கொண்டு ரயிலில் ஏற முற்பட்டுள்ளார். எனினும் ரயில் புறப்பட ஆரம்பித்து விட்டது. உடனே ரயிலுக்குள் இருந்த தன் குழந்தையை மீட்க  அந்தத் தாய் முயன்றுள்ளார். ஓடும் ரயிலில் தன் உயிரைப் பணயம் வைத்து ரயிலில் ஏற மூன்று முறை முயற்சித்து கீழே விழுந்தார்.முதல் தடவை விழுந்து மீண்டும் மீண்டும் முயற்சியைக் கைவிடாது திணறினார். இறுதியாக மூன்றாவது தடவை அவர் ரயிலில் ஏறியுள்ளார். இதில் அதிர்ச்சியூட்டும் விடயம் என்னவென்றால், ரயிலை நிறுத்த அவசரகால சங்கிலியை யாரும் இழுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. வெளியாகிய காணொளியில் அந்தத் தாய் தனது குழந்தை மீட்க ஏங்கிக்கொண்டு கீழே விழுந்து விழுந்து எழுவதை அனைவரும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.இருப்பினும் காணொளி வெளியாகி தாயின் அன்புக்கு ஈடாகுமா என்றவாறு அனைவரின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement