மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மாமாங்கம, பாடசாலை வீதியை சேர்ந்த 26வயதுடைய ரஞ்சித் விசிதன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கூழாவடி, மாமாங்கேஸ்வரர் ஆலய வீதியில் உள்ள ஒப்பந்தகாரர் ஒருவர் அவரது வாகனங்களை வீதியில் நிறுத்திவைத்திருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தற்போது மட்டக்களப்பில் மழைபெய்துவரும் நிலையிலும் குறித்த வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பகுதி இருளாகவுள்ள நிலையிலும் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாரிய வாகனங்களை ஏற்றிச்செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்திலேயே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுவது குறித்து கடந்தகாலங்களில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாமாங்கம் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் : மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மாமாங்கம, பாடசாலை வீதியை சேர்ந்த 26வயதுடைய ரஞ்சித் விசிதன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கூழாவடி, மாமாங்கேஸ்வரர் ஆலய வீதியில் உள்ள ஒப்பந்தகாரர் ஒருவர் அவரது வாகனங்களை வீதியில் நிறுத்திவைத்திருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தற்போது மட்டக்களப்பில் மழைபெய்துவரும் நிலையிலும் குறித்த வாகனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பகுதி இருளாகவுள்ள நிலையிலும் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பாரிய வாகனங்களை ஏற்றிச்செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்திலேயே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த வீதியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுவது குறித்து கடந்தகாலங்களில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.