தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் இன்று.
யாழ்ப்பாணம் - நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதன்போது காலை 10.48 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
தியாக தீபம் திலீபனின் நினைவிடம் நோக்கி மக்கள் உணர்வெழுச்சியுடன் காவடியெடுத்து வந்து நினைவேந்தல் கடமையை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று ஊரெழுவில் அமைந்துள்ள அவர் பிறந்து வாழ்ந்த காணியில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஊர்தி பவனிகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியிருந்தன.
இவ் ஊர்தி பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேசசபை உறுபபினர் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகமூடியைக் கிழித்தெறிந்து சாகும் வரை நீராகாரமற்ற உண்ணாவிரதம் இருந்து பன்னிரண்டாவது நாள் தனது உயிரை தற்கொடை செய்தவன் திலீபன். தமிழீழ மக்களிற்கும் உலகிற்கும் இந்திய ஸ்ரீலங்கா அரசின் நயவஞ்சக செயலை வெளிக்காட்டிய மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் லெப் கேணல் திலீபன் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
அவரின் அந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளான,
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் தமிழர்கள் இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
சிறையிலும், இராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
தமிழர் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முழுவதும் நிறுத்தப்பட வேண்டும். என்பதே அவரின் கோரிக்கையாகவும் அபிலாசையாகவும் இருந்தது.
தமிழின விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய தியாக தீபத்தின் உணர்வெழுச்சி நினைவேந்தல் தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் இன்று. யாழ்ப்பாணம் - நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.இதன்போது காலை 10.48 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.தியாக தீபம் திலீபனின் நினைவிடம் நோக்கி மக்கள் உணர்வெழுச்சியுடன் காவடியெடுத்து வந்து நினைவேந்தல் கடமையை மேற்கொண்டிருந்தனர்.இதேவேளை, தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று ஊரெழுவில் அமைந்துள்ள அவர் பிறந்து வாழ்ந்த காணியில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஊர்தி பவனிகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியிருந்தன.இவ் ஊர்தி பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேசசபை உறுபபினர் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகமூடியைக் கிழித்தெறிந்து சாகும் வரை நீராகாரமற்ற உண்ணாவிரதம் இருந்து பன்னிரண்டாவது நாள் தனது உயிரை தற்கொடை செய்தவன் திலீபன். தமிழீழ மக்களிற்கும் உலகிற்கும் இந்திய ஸ்ரீலங்கா அரசின் நயவஞ்சக செயலை வெளிக்காட்டிய மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் லெப் கேணல் திலீபன் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.அவரின் அந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளான,மீளக்குடியமர்தல் என்ற பெயரில் தமிழர்கள் இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.சிறையிலும், இராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.தமிழர் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முழுவதும் நிறுத்தப்பட வேண்டும். என்பதே அவரின் கோரிக்கையாகவும் அபிலாசையாகவும் இருந்தது.