• Apr 04 2025

பாடசாலைகளில் வரும் புதிய தடை..! மாணவர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு..!

Chithra / Dec 15th 2023, 12:35 pm
image

 

“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத்  தடைவிதிக்க வேண்டும்” என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 

தினமும் காலை கூட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்.

அத்துடன், மாகாணத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்களிலும் வாராந்தம் துப்பரவு பணிகளை மேற்கொள்ள திணைக்கள தலைவர்கள் அறிவுறுத்தல் வழங்க  வேண்டும்.

அத்துடன் வடக்கு மாகாணத்திற்குள் காணப்படும் தனியார் வைத்தியசாலைகளில் கடமைபுரியும் அரச வைத்தியர்களும், டெங்கு காய்ச்சல் தொடர்பில் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் இவ்வாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.


பாடசாலைகளில் வரும் புதிய தடை. மாணவர்களுக்கு வெளியான அதிரடி அறிவிப்பு.  “பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத்  தடைவிதிக்க வேண்டும்” என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் தினமும் காலை கூட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்.அத்துடன், மாகாணத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்களிலும் வாராந்தம் துப்பரவு பணிகளை மேற்கொள்ள திணைக்கள தலைவர்கள் அறிவுறுத்தல் வழங்க  வேண்டும்.அத்துடன் வடக்கு மாகாணத்திற்குள் காணப்படும் தனியார் வைத்தியசாலைகளில் கடமைபுரியும் அரச வைத்தியர்களும், டெங்கு காய்ச்சல் தொடர்பில் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் இவ்வாறு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now