சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த வரிச்சலுகை தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான முதலீடுகளுக்கு இந்த வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன.
குறித்த முதலீடுகள் மூலம் குறைந்தது 50 உள்நாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டு திட்டங்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிறுவன வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வரிச்சலுகைகள் வழங்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் முக்கிய தீர்மானமாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய முயற்சி. முதலீடுகளுக்கு நீண்டகால வரிச்சலுகை சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த வரிச்சலுகை தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 50 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான முதலீடுகளுக்கு இந்த வரிச்சலுகைகள் வழங்கப்படவுள்ளன. குறித்த முதலீடுகள் மூலம் குறைந்தது 50 உள்நாட்டு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த முதலீட்டு திட்டங்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிறுவன வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.மேலும், திட்டங்களை நடைமுறைப்படுத்த தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வரிச்சலுகைகள் வழங்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் முக்கிய தீர்மானமாக பார்க்கப்படுகிறது.