• Oct 17 2026

உலக எண்ணெய் விநியோகத்துக்கு புதிய அச்சுறுத்தல்

Ziya / Oct 17th 2026, 9:18 am
image

ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதால், அங்கு கப்பல் போக்குவரத்து போருக்கு முந்தைய நிலையைவிட 70 சதவீதம் குறைந்துள்ளதாகப் பிரிட்டனின் கடல்சார் கண்காணிப்பு அமைப்பான யுகேஎம்டிஓ (UKMTO) தெரிவித்துள்ளது.


கடந்த வாரத்தில் மட்டும் 12 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 10 சம்பவங்கள் ஹோர்முஸ் ஜலசந்திக்குள் இடம்பெற்றதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


மேலும், ஒரு கப்பல் முழுமையாக மூழ்கியதுடன், இரண்டு கப்பல்கள் கடலில் செயலிழந்து நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தாக்குதலுக்கு உள்ளான சில கப்பல்கள் சம்பவங்களைப் பற்றித் தகவல் தெரிவிக்கத் தயங்குவதாகவும் யுகேஎம்டிஓ சுட்டிக்காட்டியுள்ளது.


உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு நெருக்கடி தீவிரமடைவது, சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

உலக எண்ணெய் விநியோகத்துக்கு புதிய அச்சுறுத்தல் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதால், அங்கு கப்பல் போக்குவரத்து போருக்கு முந்தைய நிலையைவிட 70 சதவீதம் குறைந்துள்ளதாகப் பிரிட்டனின் கடல்சார் கண்காணிப்பு அமைப்பான யுகேஎம்டிஓ (UKMTO) தெரிவித்துள்ளது.கடந்த வாரத்தில் மட்டும் 12 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 10 சம்பவங்கள் ஹோர்முஸ் ஜலசந்திக்குள் இடம்பெற்றதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.மேலும், ஒரு கப்பல் முழுமையாக மூழ்கியதுடன், இரண்டு கப்பல்கள் கடலில் செயலிழந்து நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான சில கப்பல்கள் சம்பவங்களைப் பற்றித் தகவல் தெரிவிக்கத் தயங்குவதாகவும் யுகேஎம்டிஓ சுட்டிக்காட்டியுள்ளது.உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு நெருக்கடி தீவிரமடைவது, சர்வதேச வர்த்தகம் மற்றும் எரிசக்தி விநியோகத்தில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

Advertisement

Advertisement

Advertisement