சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நானு ஓயாவில் இருந்து பதுளை வரை விசேட பெட்டியுடன் கூடிய புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு புகையிரதமும் மற்றும்
வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஒரு புகையிரதமும் இயக்கப்படுமெனவும், குறுகிய தூர சுற்றுலாப் பயணிகளுக்காக மற்றுமொரு புகையிரதமும் நானுஓயிலிருந்து பதுளைக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய திட்டம் அமைச்சரின் விசேட அறிவிப்பு சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட புகையிரதத்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.அதன்படி ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நானு ஓயாவில் இருந்து பதுளை வரை விசேட பெட்டியுடன் கூடிய புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு புகையிரதமும் மற்றும் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஒரு புகையிரதமும் இயக்கப்படுமெனவும், குறுகிய தூர சுற்றுலாப் பயணிகளுக்காக மற்றுமொரு புகையிரதமும் நானுஓயிலிருந்து பதுளைக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.