வட மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கில் 52 பேர் கடந்த வருடம் கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தில் 129 பேர் கைதாகியுள்ளனர்.
அதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் 14 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 44 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 11 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறையில் 05 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 05 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 04 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு 11 பேர் கைதாகியுள்ளதுடன் 06 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 08 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் 17 பேர் கைதாகியுள்ளதுடன் 04 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 11 பேர் கைதாகியுள்ளதுடன் 07 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 13 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 37 பேர் கைதாகியுள்ளதுடன் 05பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் 52 பேர் படுகொலை. வெளியான அதிர்ச்சி தகவல். வட மாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக யாழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்டதற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.வடக்கில் 52 பேர் கடந்த வருடம் கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்தில் 129 பேர் கைதாகியுள்ளனர்.அதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் 14 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 44 பேர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 11 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.காங்கேசன்துறையில் 05 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு 09 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 05 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 04 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அங்கு 11 பேர் கைதாகியுள்ளதுடன் 06 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா மாவட்டத்தில் 08 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் 17 பேர் கைதாகியுள்ளதுடன் 04 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 08 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 11 பேர் கைதாகியுள்ளதுடன் 07 பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் 13 கொலைச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் 37 பேர் கைதாகியுள்ளதுடன் 05பேர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.