• Nov 26 2024

விறகு சேகரிக்க சென்ற நபர் ஓடையில் சடலமாக மீட்பு...!samugammedia

Sharmi / Jan 11th 2024, 1:45 pm
image

விறகு சேகரிக்க சென்ற நபர் ஓடையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கினிகத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள கெனில்வத்தை 2ம் பிரிவில் நேற்று மதியம் தனது தந்தைக்கு விறகு சேகரிக்க சென்ற 46 வயது உடைய திருமணம் முடித்த நாமல் என்பவர் வீடு திரும்பாததால் அவரது தந்தை கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாட்டை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கினிகத்தேன பொலிசார் கெனில் வத்தை 2ம் பிரிவில் உள்ள வனப் பகுதியில் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது விறகு சேகரிக்க சென்ற நபர் ஓடையில் சடலமாக கிடப்பதை கண்டு அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இன்று காலை 10 மணிக்கு அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அவரது தந்தை சென்று பார்த்த பின், குறித்த சடலம் தனது  மகன் தான் என அடையாளம் காட்டியுள்ளார்.

அதன் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நாவலப்பிட்டி நீதி மன்ற நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் சடலம் கினிகத்தேன மாவட்ட வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லபட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக புலன் விசாரணைகளை கினிகத்தேன பொலிசார் நடத்தி வருகின்றனர்.

விறகு சேகரிக்க சென்ற நபர் ஓடையில் சடலமாக மீட்பு.samugammedia விறகு சேகரிக்க சென்ற நபர் ஓடையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுகினிகத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள கெனில்வத்தை 2ம் பிரிவில் நேற்று மதியம் தனது தந்தைக்கு விறகு சேகரிக்க சென்ற 46 வயது உடைய திருமணம் முடித்த நாமல் என்பவர் வீடு திரும்பாததால் அவரது தந்தை கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாட்டை மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து கினிகத்தேன பொலிசார் கெனில் வத்தை 2ம் பிரிவில் உள்ள வனப் பகுதியில் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது விறகு சேகரிக்க சென்ற நபர் ஓடையில் சடலமாக கிடப்பதை கண்டு அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.இன்று காலை 10 மணிக்கு அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அவரது தந்தை சென்று பார்த்த பின், குறித்த சடலம் தனது  மகன் தான் என அடையாளம் காட்டியுள்ளார்.அதன் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நாவலப்பிட்டி நீதி மன்ற நீதவான் சென்று பார்வையிட்ட பின்னர் சடலம் கினிகத்தேன மாவட்ட வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லபட்டது.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக புலன் விசாரணைகளை கினிகத்தேன பொலிசார் நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement