• Mar 14 2026

தனிப்பட்ட தகராறு கொலையில் முடிந்தது; இருவர் கைது!

Chithra / Mar 13th 2026, 11:26 am
image


மாத்தறை - திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் திக்வெல்ல - ரத்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

தனிப்பட்ட தகராறு கொலையில் முடிந்தது; இருவர் கைது மாத்தறை - திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் திக்வெல்ல - ரத்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

Advertisement

Advertisement

Advertisement