• Nov 19 2024

தேர்தலுக்குள் தையிட்டி விகாரையை அபகரிக்க திட்டம்

Anaath / Sep 8th 2024, 10:30 am
image

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் யாழில் உள்ள  தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியை முழுமையாக அபகரிப்பதற்காக ரகசியமான முறையில் நில அளவீடு செய்யப்பட்டு வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தெல்லிப் பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டிக் கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அண்டிய நிலம் முழுவதையும் சுவீகரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த   நில அபகரிப்பின் முதற்கட்டமாக  நில அளவை திணைக்களம் அந்த பகுதியை அளக்க முற்பட்ட போதெல்லாம் காணி உரிமையாளர்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மாவட்ட நில அளவை திணைக்கள அதிகாரிகள், அளவீடு  மேற்கொள்ளாமல் திரும்பியுள்ளதுடன் அறிக்கை சமர்ப்பித்தனர்

இதனையடுத்து, விகாரை அமைந்துள்ள பிரதேசம் மற்றும் விகாரையைச் சூழவுள்ள பகுதியென 6 ஏக்கர் நிலப்பரப்பை, நில அளவைத்திணைக்களத்தின் தலைமைப் பணிமனை அதிகாரி ரிகள் கொழும்பில் இருந்து வருகை தந்து அள வீட்டை மேற்கொண்டு அதன் வரை படத்தை தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர். 

மேலும் அந்த பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்குள் தையிட்டி விகாரையை அபகரிக்க திட்டம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தருணத்தில் யாழில் உள்ள  தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியை முழுமையாக அபகரிப்பதற்காக ரகசியமான முறையில் நில அளவீடு செய்யப்பட்டு வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.தெல்லிப் பழை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தையிட்டிக் கிராமத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அண்டிய நிலம் முழுவதையும் சுவீகரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த   நில அபகரிப்பின் முதற்கட்டமாக  நில அளவை திணைக்களம் அந்த பகுதியை அளக்க முற்பட்ட போதெல்லாம் காணி உரிமையாளர்களும் அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மாவட்ட நில அளவை திணைக்கள அதிகாரிகள், அளவீடு  மேற்கொள்ளாமல் திரும்பியுள்ளதுடன் அறிக்கை சமர்ப்பித்தனர்இதனையடுத்து, விகாரை அமைந்துள்ள பிரதேசம் மற்றும் விகாரையைச் சூழவுள்ள பகுதியென 6 ஏக்கர் நிலப்பரப்பை, நில அளவைத்திணைக்களத்தின் தலைமைப் பணிமனை அதிகாரி ரிகள் கொழும்பில் இருந்து வருகை தந்து அள வீட்டை மேற்கொண்டு அதன் வரை படத்தை தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களை அடையாளம் காண முடியவில்லை எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement