• Dec 08 2024

அவிசாவளையில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

Sharmi / Jul 29th 2024, 4:09 pm
image

அவிசாவளை புவாக் பிட்டிய தும்மோதர இலுக் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

புவக்பிட்டிய, துன்மோதர அவிசாவளை வீதியில் சீமெந்து லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சார்ஜன்ட்,கான்ஸ்டபிளுடன் சென்று கொண்டிருந்த போது, ​​சீமெந்து லொறி தம்மை நோக்கி நெருங்கி வருவதைக் கண்டு உடனடியாக , மோட்டார் சைக்கிளை வீதியின் ஓரத்தில் நிலையிலும் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தில் ​​சீமெந்து  லொறியும் மோட்டார் சைக்கிளும் பாலத்தின் கீழ் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அவிசாவளையில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு அவிசாவளை புவாக் பிட்டிய தும்மோதர இலுக் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுபுவக்பிட்டிய, துன்மோதர அவிசாவளை வீதியில் சீமெந்து லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த சார்ஜன்ட்,கான்ஸ்டபிளுடன் சென்று கொண்டிருந்த போது, ​​சீமெந்து லொறி தம்மை நோக்கி நெருங்கி வருவதைக் கண்டு உடனடியாக , மோட்டார் சைக்கிளை வீதியின் ஓரத்தில் நிலையிலும் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் படுகாயமடைந்த மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விபத்தில் ​​சீமெந்து  லொறியும் மோட்டார் சைக்கிளும் பாலத்தின் கீழ் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement