புறாமலைத் தீவு சுற்றுலா பகுதியை பார்வையிட முறையான திட்டம் அவசியமானது என்று திருகோணமலை சுற்றுலா சேவை தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட சுற்றுலா சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடலானது இன்று (31) திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் சுற்றுலா சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முதன்மையான நோக்கமாக இருந்தது.
புறா மலை தீவுக்குச் சென்று டொல்பின்கள் மற்றும் திமிங்கலங்களைப் பார்ப்பதற்காக படகுகளைப் பதிவு செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்படாத படகுகள் மூலம் டொல்பின்கள் மற்றும் திமிங்கலங்களைப் பார்க்கும் சேவைகளை சட்டவிரோதமாக வழங்குவது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் பொருத்தமான தீர்வுகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இதன்போது முடிவு செய்யப்பட்டது.
இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் எம்.ஜி. திரு. பிரியந்த, துறைசார்ந்த அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
புறாமலைத் தீவு சுற்றுலா பகுதியை பார்வையிட முறையான திட்டம் அவசியம் புறாமலைத் தீவு சுற்றுலா பகுதியை பார்வையிட முறையான திட்டம் அவசியமானது என்று திருகோணமலை சுற்றுலா சேவை தெரிவித்துள்ளது.திருகோணமலை மாவட்ட சுற்றுலா சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடலானது இன்று (31) திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் சுற்றுலா சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முதன்மையான நோக்கமாக இருந்தது.புறா மலை தீவுக்குச் சென்று டொல்பின்கள் மற்றும் திமிங்கலங்களைப் பார்ப்பதற்காக படகுகளைப் பதிவு செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்படாத படகுகள் மூலம் டொல்பின்கள் மற்றும் திமிங்கலங்களைப் பார்க்கும் சேவைகளை சட்டவிரோதமாக வழங்குவது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.மேலும் எதிர்காலத்தில் பொருத்தமான தீர்வுகளை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இதன்போது முடிவு செய்யப்பட்டது.இதன்போது கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் எம்.ஜி. திரு. பிரியந்த, துறைசார்ந்த அரச அதிகாரிகள் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.