அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதேவேளை குறித்த போராட்டத்தில் மக்களை வீதிக்கு இறக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட் வரி அதிகரிப்பால் நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார். வெளியில் சென்று பார்த்தால் அவருக்கு நடப்பது என்ன என்று தெரியும்.
வட் வரிகளை அதிகரிக்க முன்னர் ஆய்வுகளை செய்தே அதனை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.
இந்நிலையில், மக்கள் நாளாந்தம் உணவுக்காக கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 மில்லியன் மக்களில் 11 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களோ மக்களின் பிரச்சினைகள் எதுவும் தெரியாததைபோன்று இருக்கின்றனர்.
இதனை புரியாது நடுக்கடலில் விருந்து நிகழ்வுகளை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். அடுத்ததாக இரண்டாவது சுற்று அடிகளை வாங்கவும் போகின்றனர். பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சியினர் திட்டமிடுகின்றனர்.
அவ்வாறு செய்துகொண்டே ஒன்லைன் சட்டமூலத்தையும் கொண்டுவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக வெடிக்கவுள்ள போராட்டம். சஜித் தரப்பு அதிரடித் திட்டம்.samugammedia அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதேவேளை குறித்த போராட்டத்தில் மக்களை வீதிக்கு இறக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வட் வரி அதிகரிப்பால் நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார். வெளியில் சென்று பார்த்தால் அவருக்கு நடப்பது என்ன என்று தெரியும். வட் வரிகளை அதிகரிக்க முன்னர் ஆய்வுகளை செய்தே அதனை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இந்நிலையில், மக்கள் நாளாந்தம் உணவுக்காக கடன் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 மில்லியன் மக்களில் 11 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியாளர்களோ மக்களின் பிரச்சினைகள் எதுவும் தெரியாததைபோன்று இருக்கின்றனர்.இதனை புரியாது நடுக்கடலில் விருந்து நிகழ்வுகளை நடத்திக்கொண்டு இருக்கின்றனர். அடுத்ததாக இரண்டாவது சுற்று அடிகளை வாங்கவும் போகின்றனர். பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சியினர் திட்டமிடுகின்றனர். அவ்வாறு செய்துகொண்டே ஒன்லைன் சட்டமூலத்தையும் கொண்டுவருகின்றனர் எனவும் தெரிவித்தார்.