• Jun 16 2024

நெடுந்தீவுக்கான படகுச் சேவை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு...!

Sharmi / May 23rd 2024, 9:34 pm
image

Advertisement

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை துறைகளிலிருந்து முன்னெடுக்கப்படும் படகு போக்குவரத்து  நாளை (24) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நாளை (24) கடற்கொந்தளிப்பாக  இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நெடுந்தீவு , அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை அம்மன் இறங்குதுறையிலிருந்து  முன்னெடுக்கப்பட்டுவரும் படகு போக்குவரத்து இடம்பெறமாட்டாது என அறிவித்துள்ளது.

அதேவேளை, எதிர்வரும் 25ம் திகதி வரை இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது எனவும் தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக  யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவுக்கான படகுச் சேவை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு. நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை துறைகளிலிருந்து முன்னெடுக்கப்படும் படகு போக்குவரத்து  நாளை (24) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நாளை (24) கடற்கொந்தளிப்பாக  இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நெடுந்தீவு , அனலைதீவு மற்றும் எழுவை தீவுகளுக்கு குறிகாட்டுவான் மற்றும் கண்ணகை அம்மன் இறங்குதுறையிலிருந்து  முன்னெடுக்கப்பட்டுவரும் படகு போக்குவரத்து இடம்பெறமாட்டாது என அறிவித்துள்ளது.அதேவேளை, எதிர்வரும் 25ம் திகதி வரை இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது எனவும் தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக  யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement