• Jun 16 2024

வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சஞ்சீவனி ஹேரத் நியமனம்

Sharmi / May 23rd 2024, 9:48 pm
image

Advertisement

வடமேல் மாகாண பிரதம அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சஞ்சீவனி ஹேரத், வடமேல் மாகாண  உள்ளூராட்சி  ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் இவருக்கான நியமனக் கடிதத்தை கையளித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அவர், கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக   சேவை திறந்த  பரீட்சையில் சித்தி பெற்று , ஆனமடுவ பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக  நியமிக்கப்பட்டார்.

பின்னர், வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளராகவும், வடமேல் மாகாண பிரதி காணி ஆணையாளராகவும் மாகாண நன்னடத்தை ஆணையாளராகவும் இவர் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சஞ்சீவனி ஹேரத் நியமனம் வடமேல் மாகாண பிரதம அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சஞ்சீவனி ஹேரத், வடமேல் மாகாண  உள்ளூராட்சி  ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் இவருக்கான நியமனக் கடிதத்தை கையளித்தார்.இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான அவர், கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நிர்வாக   சேவை திறந்த  பரீட்சையில் சித்தி பெற்று , ஆனமடுவ பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக  நியமிக்கப்பட்டார்.பின்னர், வண்ணாத்திவில்லு பிரதேச செயலாளராகவும், வடமேல் மாகாண பிரதி காணி ஆணையாளராகவும் மாகாண நன்னடத்தை ஆணையாளராகவும் இவர் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement