• Sep 17 2024

1350 ரூபா சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாது..! முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான்

Chithra / Jul 17th 2024, 11:20 am
image

Advertisement

 

1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக ரூ.1350 சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக மறுப்பை வெளியிட்டு வருகிறது.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்காது தான்தோன்றித்தனமாக கம்பனிகள் செயல்படுவதுடன், 

1200 அடிப்படை சம்பளமும், 80 வீதம் பணியில் ஈடுபட்டால் ரூ.150 கொடுப்பனவுடன் 1350 ரூபாவை மாத்திரமே வழங்க முடியும் என கூறுகின்றன.

கம்பனிகள் தொழில் அமைச்சுக்கு சமர்பித்த முன்மொழிவை இ.தொ.கா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நிலை தொடருமானால் பெருந்தோட்டங்கள் முழுவதும் 1700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி கடுமையான போராட்டங்களை தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் என இ.தொ.காவின் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

1350 ரூபா சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்மொழிவை நிராகரித்த செந்தில் தொண்டமான்  1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக ரூ.1350 சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வை வழங்க முதலாளிமார் சம்மேளனம் தொடர்ச்சியாக மறுப்பை வெளியிட்டு வருகிறது.தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்காது தான்தோன்றித்தனமாக கம்பனிகள் செயல்படுவதுடன், 1200 அடிப்படை சம்பளமும், 80 வீதம் பணியில் ஈடுபட்டால் ரூ.150 கொடுப்பனவுடன் 1350 ரூபாவை மாத்திரமே வழங்க முடியும் என கூறுகின்றன.கம்பனிகள் தொழில் அமைச்சுக்கு சமர்பித்த முன்மொழிவை இ.தொ.கா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்நிலை தொடருமானால் பெருந்தோட்டங்கள் முழுவதும் 1700 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி கடுமையான போராட்டங்களை தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் என இ.தொ.காவின் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement