அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வருகிறது. அதே மாதிரி தனியார் நிறுவனங்கள், பெருந்தோட்ட நிறுவனங்களிலும் இந்த மாதிரியான ஒரு சம்பள அதிகரிப்பு கட்டாயம் அவசியம். என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மலையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பெருந்தோட்ட நிறுவனங்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எங்களுடைய கோரிக்கையியையும் தெளிவாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் சொல்லியிருந்தார்.
3 கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள LJW, CW, மற்றும் JPTUC ஆகிய 3 பிரதான தொழில் சங்கங்களிலும் கோரிக்கைகளை ஜனாதிபதி பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொல்லியிருந்தார். அதே நேரத்தில் ஜனாதிபதி இன்னொரு விடயத்தையும் சொல்லியிருந்தார். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வருகிறது. அதே மாதிரி தனியார் நிறுவனங்கள், பெருந்தோட்ட நிறுவனங்களிலும் இந்த மாதிரி ஒரு சம்பள அதிகரிப்பு கட்டாயம் அவசியம்.
ஏனெனில் கடந்த இரண்டு வருட காலமாக 73.8 சதவீதமான பணவீக்கத்துக்கு நாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்ட நிறுவனங்கள் எப்பவும் சொல்லுகின்ற காரணம் என்னவென்றால் அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள் தான் விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன. அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பெடுக்க முடியும் என்று. ஆனால் பெருந்தோட்ட நிறுவனங்களிடம் நாங்களும் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கின்றோம். இவர்கள் இலாபம் சம்பாதிப்பதற்கு மட்டும் அரசாங்கத்தின் கண் பார்வையில் விழவில்லை. ஆனால் விலை வாசி அதிகரிக்கும் போது அரசங்காத்தின் நடவடிக்கை காரணத்தால் தான் எங்களால் சம்பளம் அதிகரிக்க முடியாது என்று சொல்லுவது விளையாட்டு தனம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி இந்த வருடம் டிசம்பர் மாத 31 ஆம் திகதி வரை ஒரு காலக்கெடு கொடுத்திருக்கிறார். கட்டாயம் இதன் மூலமாக மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் நாங்கள் என்றைக்கும் சொல்லியிருக்கிறோம் அதே நிலைமையில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரசை இன்று வரை இருக்கிறது. இந்த 1700, 2000, 2500இந்த மாதிரி ஒவ்வொரு இலக்கை வைத்து நாங்கள் செல்லும் போது, கடைசியில் அது வந்து நாள் கூலியான சம்பளம், இந்த நாள் சம்பள முறைமையை நாங்கள் மாற்றியாக வேண்டும். அத்தனையும் ஜனாதிபதி தெளிவாக நிதியமைச்சின் உரையில் சொல்லியிருக்கிறார். ஆகவே இது தோட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக தீர்வு தானே தவிர நிரந்தர தீர்வு கிடையாது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
சம்பள முன்மொழிவு என்பது தற்காலிக தீர்வு - எமக்கு நிரந்தர தீர்வு அவசியம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு.samugammedia அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வருகிறது. அதே மாதிரி தனியார் நிறுவனங்கள், பெருந்தோட்ட நிறுவனங்களிலும் இந்த மாதிரியான ஒரு சம்பள அதிகரிப்பு கட்டாயம் அவசியம். என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மலையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் அதி மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பெருந்தோட்ட நிறுவனங்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். எங்களுடைய கோரிக்கையியையும் தெளிவாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் சொல்லியிருந்தார். 3 கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள LJW, CW, மற்றும் JPTUC ஆகிய 3 பிரதான தொழில் சங்கங்களிலும் கோரிக்கைகளை ஜனாதிபதி பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொல்லியிருந்தார். அதே நேரத்தில் ஜனாதிபதி இன்னொரு விடயத்தையும் சொல்லியிருந்தார். அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வருகிறது. அதே மாதிரி தனியார் நிறுவனங்கள், பெருந்தோட்ட நிறுவனங்களிலும் இந்த மாதிரி ஒரு சம்பள அதிகரிப்பு கட்டாயம் அவசியம். ஏனெனில் கடந்த இரண்டு வருட காலமாக 73.8 சதவீதமான பணவீக்கத்துக்கு நாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்ட நிறுவனங்கள் எப்பவும் சொல்லுகின்ற காரணம் என்னவென்றால் அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள் தான் விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன. அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பெடுக்க முடியும் என்று. ஆனால் பெருந்தோட்ட நிறுவனங்களிடம் நாங்களும் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கின்றோம். இவர்கள் இலாபம் சம்பாதிப்பதற்கு மட்டும் அரசாங்கத்தின் கண் பார்வையில் விழவில்லை. ஆனால் விலை வாசி அதிகரிக்கும் போது அரசங்காத்தின் நடவடிக்கை காரணத்தால் தான் எங்களால் சம்பளம் அதிகரிக்க முடியாது என்று சொல்லுவது விளையாட்டு தனம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி இந்த வருடம் டிசம்பர் மாத 31 ஆம் திகதி வரை ஒரு காலக்கெடு கொடுத்திருக்கிறார். கட்டாயம் இதன் மூலமாக மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் நாங்கள் என்றைக்கும் சொல்லியிருக்கிறோம் அதே நிலைமையில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரசை இன்று வரை இருக்கிறது. இந்த 1700, 2000, 2500இந்த மாதிரி ஒவ்வொரு இலக்கை வைத்து நாங்கள் செல்லும் போது, கடைசியில் அது வந்து நாள் கூலியான சம்பளம், இந்த நாள் சம்பள முறைமையை நாங்கள் மாற்றியாக வேண்டும். அத்தனையும் ஜனாதிபதி தெளிவாக நிதியமைச்சின் உரையில் சொல்லியிருக்கிறார். ஆகவே இது தோட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக தீர்வு தானே தவிர நிரந்தர தீர்வு கிடையாது. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்