திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள வகுப்பறைக் கட்டிடம் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே குடைசாய்ந்து காணப்படுவதாகவும், எந்நேரமும் இடிந்து விழக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை தொடர்பாக கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழும் அபாயம் நிலவுவதால், அதன் அருகில் உள்ள வகுப்பறைகளில் மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தரம் 1 முதல் உயர்தரம் வரை கல்வி கற்பிக்கும் இப்பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தி சேதமடைந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்கவோ அல்லது மாற்று பாதுகாப்பான கட்டிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவோ நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிய பாடசாலை கட்டிடம்; குடைசாய்ந்த வகுப்பறையில் தொடரும் கல்வி திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள வகுப்பறைக் கட்டிடம் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.குறித்த கட்டிடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே குடைசாய்ந்து காணப்படுவதாகவும், எந்நேரமும் இடிந்து விழக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலைமை தொடர்பாக கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு பலமுறை அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.கட்டிடம் இடிந்து விழும் அபாயம் நிலவுவதால், அதன் அருகில் உள்ள வகுப்பறைகளில் மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.தரம் 1 முதல் உயர்தரம் வரை கல்வி கற்பிக்கும் இப்பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தி சேதமடைந்த கட்டிடத்தை உடனடியாக சீரமைக்கவோ அல்லது மாற்று பாதுகாப்பான கட்டிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவோ நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.