• Sep 20 2024

யாழில் டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Sharmi / Aug 8th 2024, 1:30 pm
image

Advertisement

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று(08)  காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

குறித்த டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகள் அடுக்கப்பட்டு அதற்கு மேல் சிறிய கற்கள் ஏற்றப்பட்டு சூட்சுமமான முறையில் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்கு மரக் குற்றிகளே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டது.

சம்பவத்தில் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யாழில் டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி. யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று(08)  காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.குறித்த டிப்பர் வாகனத்தினுள் மரக்குற்றிகள் அடுக்கப்பட்டு அதற்கு மேல் சிறிய கற்கள் ஏற்றப்பட்டு சூட்சுமமான முறையில் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 தேக்கு மரக் குற்றிகளே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டது.சம்பவத்தில் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை நாளை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement