அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தம்மைத்தாமே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அத்துடன், அவருக்குக் குறிப்பிடத்தக்க குற்றவியல் பின்னணி எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
நேற்று காலை மாணவர்களுக்கான வழக்கமான பிரார்த்தனை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
அப்போது பாடசாலை வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதனால் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
குறித்த துப்பாக்கிச்சூடு உள்நாட்டுப் பயங்கரவாதச் செயலா அல்லது கத்தோலிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றமா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூட்டு சம்பவம்; இரு சிறுவர்கள் பலி; பலர் காயம் அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் (Minneapolis) நகரில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தம்மைத்தாமே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அத்துடன், அவருக்குக் குறிப்பிடத்தக்க குற்றவியல் பின்னணி எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில், நேற்று காலை மாணவர்களுக்கான வழக்கமான பிரார்த்தனை கூட்டம் இடம்பெற்றுள்ளது.அப்போது பாடசாலை வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.இதனால் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர்.இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. குறித்த துப்பாக்கிச்சூடு உள்நாட்டுப் பயங்கரவாதச் செயலா அல்லது கத்தோலிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றமா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது