பாணந்துறை - வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த நபர் "பாணந்துறை நிலங்க" என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் மாமனார் என்பது தெரியவந்துள்ளது.
அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய டில்ஷான் சுதேஷ் பெர்னாண்டோ என்பரே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
பாணந்துறை பகுதியில் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்து என்பவரின் தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் அட்டகாசம்; வீட்டிற்குள் புகுந்த துப்பாகிதாரிகள் ஒருவர் பலி பாணந்துறை - வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் உயிரிழந்த நபர் "பாணந்துறை நிலங்க" என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் மாமனார் என்பது தெரியவந்துள்ளது.அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய டில்ஷான் சுதேஷ் பெர்னாண்டோ என்பரே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பாணந்துறை பகுதியில் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்து என்பவரின் தரப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.மேலும் சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.