• Nov 25 2024

தமிழ் பொதுவேட்பாளரை தனியொரு கட்சி தீர்மானிக்க முடியாது...! அனைவரும் ஒருமித்து செயற்படுவது அவசியம்...! வியாழேந்திரன் வலியுறுத்து...!

Sharmi / Jun 17th 2024, 10:10 am
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மிகவும் கவனமாக காய்களை நகர்த்தவேண்டும் என்பதுடன் நீண்டகாலத்திற்குரிய பிரச்சினைகளை தீர்வுகளைப்பெறக்கூடிய வகையில் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் கொண்ட கட்டிடத்தொகுதி இன்று(17) திறந்துவைக்கப்பட்டது.

உலக வங்கியின் நிதி பங்களிப்பில் மண்முனைப்பற்று பிரதேசபையினால் சுமார் 69இலட்சம் ரூபா செலவில் இந்த வர்த்தக நிலைய தொகுதி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 மண்முனைப்பற்று பிரதேசபையின் செயலாளர் யோ.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி டினேஸ்,மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரகாஸ்,கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இணைப்பாளர் டினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடைத்தொகுதிகள் திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,

தமிழ் பொது வேட்பாளர் என்பது தனி ஒரு கட்சி தீர்மானிக்க முடியாது ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மலையக இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுடைய ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைமைகள் அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதிகள் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைத்து தான் தமிழ் பொது வேட்பாளரின் விடயத்தை பற்றி பேச வேண்டும்.

அதை விட்டுவிட்டு அன்று மட்டக்களப்பில் பார்த்தேன் நான்கு பேர் சேர்ந்து அவர்கள் பொது வேட்பாளர்களை தீர்மானிக்கின்றார்கள். அப்போது ஒரு நண்பர் கேட்டார் நீங்கள் ஏன் வரவில்லை என்று அதற்கு இவர்களுக்கே அழைப்பில்லை ஒரு முட்டைகோஸ் குரூப் ஒன்று நான்கு பேர் கூடியிருந்து அவர்கள் புது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடுகிறார்கள்.

இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும் வாயால் வத்தலை கொடி நாட்டுகின்ற கேஸ்தான் இவர்கள் ஆனால் வாயால் வத்தலை கிழங்கு நாட்டாமல் நாங்கள் உண்மையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

அதற்கான களத்தினை அமைக்காமல் விரும்பியவாறு ஒவ்வொருவரும் நான்கு பேர் கூடுவது மூன்று பேர் கூடிக்கொண்டு இவ்வாறான விடயங்களை பேச முடியாது இது முக்கியமான விடயம் ஏனெனில் வர இருப்பது ஜனாதிபதி தேர்தல்.

நாங்கள் தமிழர்கள் மிக கவனமாக காய்களை நகர்த்த வேண்டும் ஏனென்றால் உங்களுடைய நீண்ட கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற வேண்டும் உடனடி பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற வேண்டும் அபிவிருத்தி சார்ந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் அனைத்தினையும் கருத்தில் கொண்டு தான் நாங்கள் இந்த ஜனாதிபதி விடயத்திலே மிக கவனமாக செயல்பட வேண்டும் அதிலும் ஒருமித்து செயல்பட வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

தமிழ் பொதுவேட்பாளரை தனியொரு கட்சி தீர்மானிக்க முடியாது. அனைவரும் ஒருமித்து செயற்படுவது அவசியம். வியாழேந்திரன் வலியுறுத்து. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மிகவும் கவனமாக காய்களை நகர்த்தவேண்டும் என்பதுடன் நீண்டகாலத்திற்குரிய பிரச்சினைகளை தீர்வுகளைப்பெறக்கூடிய வகையில் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதி பொதுச்சந்தையில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள் கொண்ட கட்டிடத்தொகுதி இன்று(17) திறந்துவைக்கப்பட்டது.உலக வங்கியின் நிதி பங்களிப்பில் மண்முனைப்பற்று பிரதேசபையினால் சுமார் 69இலட்சம் ரூபா செலவில் இந்த வர்த்தக நிலைய தொகுதி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மண்முனைப்பற்று பிரதேசபையின் செயலாளர் யோ.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி டினேஸ்,மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரகாஸ்,கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இணைப்பாளர் டினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது கடைத்தொகுதிகள் திறந்துவைக்கப்பட்டதை தொடர்ந்து அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,தமிழ் பொது வேட்பாளர் என்பது தனி ஒரு கட்சி தீர்மானிக்க முடியாது ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மலையக இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுடைய ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைமைகள் அரசியல் கட்சிகள் மக்கள் பிரதிநிதிகள் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் அனைவரையும் ஒன்றிணைத்து தான் தமிழ் பொது வேட்பாளரின் விடயத்தை பற்றி பேச வேண்டும்.அதை விட்டுவிட்டு அன்று மட்டக்களப்பில் பார்த்தேன் நான்கு பேர் சேர்ந்து அவர்கள் பொது வேட்பாளர்களை தீர்மானிக்கின்றார்கள். அப்போது ஒரு நண்பர் கேட்டார் நீங்கள் ஏன் வரவில்லை என்று அதற்கு இவர்களுக்கே அழைப்பில்லை ஒரு முட்டைகோஸ் குரூப் ஒன்று நான்கு பேர் கூடியிருந்து அவர்கள் புது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடுகிறார்கள்.இவை அனைத்தும் உங்களுக்கு நன்றாக தெரியும் வாயால் வத்தலை கொடி நாட்டுகின்ற கேஸ்தான் இவர்கள் ஆனால் வாயால் வத்தலை கிழங்கு நாட்டாமல் நாங்கள் உண்மையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.அதற்கான களத்தினை அமைக்காமல் விரும்பியவாறு ஒவ்வொருவரும் நான்கு பேர் கூடுவது மூன்று பேர் கூடிக்கொண்டு இவ்வாறான விடயங்களை பேச முடியாது இது முக்கியமான விடயம் ஏனெனில் வர இருப்பது ஜனாதிபதி தேர்தல்.நாங்கள் தமிழர்கள் மிக கவனமாக காய்களை நகர்த்த வேண்டும் ஏனென்றால் உங்களுடைய நீண்ட கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற வேண்டும் உடனடி பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெற வேண்டும் அபிவிருத்தி சார்ந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் அனைத்தினையும் கருத்தில் கொண்டு தான் நாங்கள் இந்த ஜனாதிபதி விடயத்திலே மிக கவனமாக செயல்பட வேண்டும் அதிலும் ஒருமித்து செயல்பட வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement