• Jun 26 2024

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப் பாதையை திறக்கும் தினத்தில் மாற்றம்...! அரச தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும்...! செந்தூரன் கோரிக்கை...!

Sharmi / Jun 17th 2024, 10:26 am
image

Advertisement

கதிர்காம பாதை யாத்திரையின் போதான அதன் வீதி வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணண் சேவா அமைப்பின் தலைவர் கே.செந்தூரன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்றையதினம்(16)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கதிர்காம யாத்திரைகளை அவசரமாக சென்று நிறைவேற்ற முடியாது. பக்தர்களின் வருகையை குறைக்கும் செயலாக இந்த நாட்கள் பிற்போடப்பட்டமை காணப்படுகிறது.

பண்டைய காலம் தொடக்கம் மரபு ரீதியாக இது நடைபெறுகின்றது.

நேர்த்தி கடனுக்காக சிறுவர்கள் முதல் பெரியார்கள் ,கர்ப்பிணி தாய்மார்கள் என உகந்தை முதல் கதிர்காம யாத்திரைகளை சைவப்படி மேற்கொள்வது வழக்கம்.

ஆனால் தற்போது அடுத்த மாதம் 2ம் திகதி வரை பிற்போட்டிருப்பதும் குறுகிய காலத்தில் செய்வதென்பதும் தடுக்கும் செயலாக காணப்படுகிறது.

சிங்களவர்கள் தமிழர்கள் என பலரும் கதிர்காம யாத்திரையினை மேற்கொள்வது வழக்கம்.ஈழத்து சைவர்களின் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது.

நடந்து சென்று நேர்த்தி கடனை நடந்து சென்று ஆண்மீகம் தொன்று தொட்டு நடந்து வருகிறது. கடினமான பாதை காடுகள் ஊடாக செல்ல வேண்டும்.இந்த மாதம் 30ம் திகதி திறக்கப்பட இருந்த நிலையில் நாட்கள் பிற்போடப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்குள் இதனை நிறைவேற்றுவது கடினம் .பல்லாயிரக்கணக்கான பாதை யாத்திரை குழுக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

வழமை போன்று இந்த பாதை யாத்திரை நடைபெற முன்வர வேண்டும் 

 எனவே உரிய அரச தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப் பாதையை திறக்கும் தினத்தில் மாற்றம். அரச தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும். செந்தூரன் கோரிக்கை. கதிர்காம பாதை யாத்திரையின் போதான அதன் வீதி வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணண் சேவா அமைப்பின் தலைவர் கே.செந்தூரன் தெரிவித்தார்.திருகோணமலையில் நேற்றையதினம்(16)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கதிர்காம யாத்திரைகளை அவசரமாக சென்று நிறைவேற்ற முடியாது. பக்தர்களின் வருகையை குறைக்கும் செயலாக இந்த நாட்கள் பிற்போடப்பட்டமை காணப்படுகிறது.பண்டைய காலம் தொடக்கம் மரபு ரீதியாக இது நடைபெறுகின்றது. நேர்த்தி கடனுக்காக சிறுவர்கள் முதல் பெரியார்கள் ,கர்ப்பிணி தாய்மார்கள் என உகந்தை முதல் கதிர்காம யாத்திரைகளை சைவப்படி மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது அடுத்த மாதம் 2ம் திகதி வரை பிற்போட்டிருப்பதும் குறுகிய காலத்தில் செய்வதென்பதும் தடுக்கும் செயலாக காணப்படுகிறது. சிங்களவர்கள் தமிழர்கள் என பலரும் கதிர்காம யாத்திரையினை மேற்கொள்வது வழக்கம்.ஈழத்து சைவர்களின் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது. நடந்து சென்று நேர்த்தி கடனை நடந்து சென்று ஆண்மீகம் தொன்று தொட்டு நடந்து வருகிறது. கடினமான பாதை காடுகள் ஊடாக செல்ல வேண்டும்.இந்த மாதம் 30ம் திகதி திறக்கப்பட இருந்த நிலையில் நாட்கள் பிற்போடப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்குள் இதனை நிறைவேற்றுவது கடினம் .பல்லாயிரக்கணக்கான பாதை யாத்திரை குழுக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். வழமை போன்று இந்த பாதை யாத்திரை நடைபெற முன்வர வேண்டும்  எனவே உரிய அரச தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement