தெற்கு ஆஸ்திரியாவில் சனிக்கிழமையன்று (15) ஒரு சிரிய புகலிடக் கோரிக்கையாளர் மேற்கொண்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பலத்த காயம் அடைந்தனர், மற்ற இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக வில்லாச் நகரில் உள்ள பொலிஸார் அந்நாட்டின் தேசிய செய்தித்தாளான க்ளீன் ஜெய்டுங்கிடம் உறுதிபடுத்தியுள்ளனர்.
அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 23 வயதுடைய சிரிய இளைஞனை பொலிசார் விரைவாகக் கைது செய்தனர்.
இந்த நகரம் இத்தாலியுடனான ஆஸ்திரியாவின் எல்லையிலிருந்து 20 மைல் தொலைவிலும், ஸ்லோவேனியாவுடனான அதன் எல்லையிலிருந்து 15 மைல்களுக்கும் குறைவான தொலைவிலும் உள்ளது.
வில்லாச் சுமார் 62,000 மக்களைக் கொண்டுள்ளது, இது நாட்டின் ஏழாவது பெரிய நகரமாக உள்ளது.
சனிக்கிழமையன்று நடந்த தாக்குதல் தற்செயலானதாகத் தோன்றியது என்பு பொலிஸார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும் தாக்கியவருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்களில் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் கத்திக் குத்து தாக்குதல் தெற்கு ஆஸ்திரியாவில் சனிக்கிழமையன்று (15) ஒரு சிரிய புகலிடக் கோரிக்கையாளர் மேற்கொண்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.இந்த சம்பத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பலத்த காயம் அடைந்தனர், மற்ற இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக வில்லாச் நகரில் உள்ள பொலிஸார் அந்நாட்டின் தேசிய செய்தித்தாளான க்ளீன் ஜெய்டுங்கிடம் உறுதிபடுத்தியுள்ளனர்.அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து 23 வயதுடைய சிரிய இளைஞனை பொலிசார் விரைவாகக் கைது செய்தனர்.இந்த நகரம் இத்தாலியுடனான ஆஸ்திரியாவின் எல்லையிலிருந்து 20 மைல் தொலைவிலும், ஸ்லோவேனியாவுடனான அதன் எல்லையிலிருந்து 15 மைல்களுக்கும் குறைவான தொலைவிலும் உள்ளது.வில்லாச் சுமார் 62,000 மக்களைக் கொண்டுள்ளது, இது நாட்டின் ஏழாவது பெரிய நகரமாக உள்ளது.சனிக்கிழமையன்று நடந்த தாக்குதல் தற்செயலானதாகத் தோன்றியது என்பு பொலிஸார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும் தாக்கியவருக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்களில் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.