மும்பையின் அமைந்துள்ள 11 மாடி கட்டிடத்தில் இன்று (16) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தத்தில் மேலும், மூன்று பேர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு மும்பையில் உள்ள மஸ்ஜித் பந்தர் பகுதியில் அமைந்துள்ள பன்னா அலி மேன்ஷன் கட்டிடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை காலை 6.11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
புகையால் பல குடியிருப்புவாசிகள் காயம் மற்றும் மூச்சுத்திணறல் அடைந்தனர். முதல் மாடியில் இருந்த இரண்டு பெண்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டு புகையை சுவாசித்ததால் அவதிப்பட்டனர்.
அவர்கள் பொலிஸ் அவரச வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். புகையால் பாதிக்கப்பட்ட ஆறாவது மாடியில் வசிக்கும் ஒரு ஆண், தனியார் வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எட்டாவது மாடியில் இருந்த ஒரு பெண் தனியார் ஆம்பியூலன் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீயணைப்பு படையினரின் விரைவான நடவடிக்கையினால் காலை 06.31 மணியளவில் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மும்பை 11 மாடி கட்டிடத்தில் தீ : பெண்ணொருவர் உயிரிழப்பு, மேலும் மூவருக்கு மூச்சுத் திணறல் மும்பையின் அமைந்துள்ள 11 மாடி கட்டிடத்தில் இன்று (16) காலை ஏற்பட்ட தீ விபத்தில் 42 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தத்தில் மேலும், மூன்று பேர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தெற்கு மும்பையில் உள்ள மஸ்ஜித் பந்தர் பகுதியில் அமைந்துள்ள பன்னா அலி மேன்ஷன் கட்டிடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை காலை 6.11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.புகையால் பல குடியிருப்புவாசிகள் காயம் மற்றும் மூச்சுத்திணறல் அடைந்தனர். முதல் மாடியில் இருந்த இரண்டு பெண்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டு புகையை சுவாசித்ததால் அவதிப்பட்டனர்.அவர்கள் பொலிஸ் அவரச வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். புகையால் பாதிக்கப்பட்ட ஆறாவது மாடியில் வசிக்கும் ஒரு ஆண், தனியார் வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.எட்டாவது மாடியில் இருந்த ஒரு பெண் தனியார் ஆம்பியூலன் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீயணைப்பு படையினரின் விரைவான நடவடிக்கையினால் காலை 06.31 மணியளவில் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.